டிசம்பர் 1 முதல் ATM-களில் பணம் எடுக்கும் விதிமுறையில் மாற்றம்..!

Sun, 29 Nov 2020-7:19 am,

நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், ATM-களில் இருந்து பணம் எடுக்கும் முறை டிசம்பர் 1 முதல் மாறப்போகிறது. இப்போது நீங்கள் வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் மொபைல் போனை கையில் எடுக்காமல் ATM-ல் இருந்து பணத்தை எடுக்க முடியாது. உண்மையில், PNB வங்கி 2020 டிசம்பர் 1 முதல் OTP அடிப்படையிலான முறையை செயல்படுத்தப் போகிறது. இதன் மூலம், ATM-ல் இருந்து பணம் எடுப்பது மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

தற்போதைய நிலையில், தொழில்நுட்பம் வங்கியை எளிதாக்கியுள்ள நிலையில், மோசடி மற்றும் மோசடிகளுக்கான ஆபத்தும் அதிகரித்துள்ளது. ATM மோசடி தொடர்பான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக, PNB தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ATM-மிலிருந்து பணம் எடுக்க OTP முறையை செயல்படுத்தப் போகிறது.

தற்போது அதிகரித்து வரும் ATM மோசடிகளை கருத்தில் கொண்டு, PNB தனது வாடிக்கையாளர்களின் நலனுக்காக, ATM-களில் இருந்து பணத்தை எடுப்பதை பாதுகாப்பானதாக்க OTP முறையை செயல்படுத்தியுள்ளது. இது டிசம்பர் 1 முதல் தொடங்கும். அதாவது, ATM-மில் இருந்து பணத்தை எடுக்கும்போது, ​​இப்போது வாடிக்கையாளர் தனது PIN உடன் கூடுதலாக ஒரு முறை கடவுச்சொல்லையும் (OTP) உள்ளிட வேண்டும். இந்த OTP-ஐ வங்கி வாடிக்கையாளருக்கு அனுப்பும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB, eOBC, eUNI) ஒன் டைம் கடவுச்சொல் (OTP) அடிப்படையில் பணம் எடுக்கும் வசதியை டிசம்பர் 1 முதல் தொடங்க உள்ளது. PNB தனது ட்வீட்டில், டிசம்பர் 1 முதல் இரவு 8 மணி முதல் காலை 8 மனி வரை PNB 2.0 ATM-மில் இருந்து ஒரு முறையில் ரூ .10,000 க்கும் அதிகமான பணத்தை எடுக்க இனி OTP தேவைப்படும் என்று கூறியுள்ளது.

அதாவது, PNB வாடிக்கையாளர்களுக்கு இரவில் ரூ .10,000 க்கும் அதிகமான தொகையை எடுக்க OTP தேவைப்படும். ஆகையால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைலை அவர்களுடன் எடுத்துச் செல்ல வெண்டும். ATM மோசடி (ATM Scam) வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு PNB இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) ஆகியவை PNB-யில் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்குப் பிறகு உருவாக்கப்பட்ட நிறுவனத்திற்கு PNB 2.0 என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

PNB தனது ட்வீட்டில், OTP அடிப்படையில் பணம் எடுப்பது PNB 2.0 ATM-ம்மில் மட்டுமே பொருந்தும் என்று கூறியுள்ளது. அதாவது, பிற வங்கி ATM-களில் இருந்து PNB டெபிட் / ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுக்க OTP அடிப்படையில் பணம் எடுக்கும் வசதி இருக்காது.

உங்கள் டெபிட் கார்டுடன் PNB ATM-க்குச் சென்று பணத்தை எடுக்க கார்டை செருகி PIN-ஐ உள்ளிடும்போது, ​​வங்கி உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP-ஐ அனுப்பும். இதை ஒரு பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். நீங்கள் மற்றொரு பரிவர்த்தனை செய்தால் மற்றொன்று OTP உங்கள் மொபைலுக்கு வரும். இந்த புதிய அமைப்பு ATM மோசடிகளைத் தடுக்க மட்டுமே. இது பணம் எடுக்கும் செயல்முறையை பாதிக்காது.

SBI ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்காக இந்த வசதியை செயல்படுத்தியுள்ளது. SBI ஏடிஎம்களில் 2020 ஜனவரி 1 முதல் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ரூ .10,000 க்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு OTP அடிப்படையிலான செயல்முறையை அறிமுகப்படுத்தியது. பின்னர் 2020 செப்டம்பரில், எஸ்பிஐ 10000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை எடுப்பதற்கு 24 மணி நேரமும் ஏழு நாட்களும் அதாவது எப்போதும் OTP அடிப்படையிலான செயல்முறையே இருக்கும் என்று கூறி அதை அமல்படுத்தி விட்டது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link