குரு உதயத்தால் இந்த ராசிகளுக்கு அற்புதமான ராஜயோகம், நன்மைகள் அதிகமாகும்
குரு பகவானின் உதயம் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாகும். மே மாதம் 1 ஆம் தேதி குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். குரு உதயம் இதே ஆண்டில் நடக்கும் குருவின் மற்றொரு பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
குரு உதயத்தின் தாக்கத்தால் அனைத்து ராசிகளிலும் மாற்றம் ஏற்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குரு உதயத்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். புதிய வேலை கிடைக்கலாம். சில முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக நடந்து முடியும். நிதி ஆதாயம் உண்டாகும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். அறிவாற்றல் பெருகும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
ரிஷபம்: குரு உதயம் மற்றும் குரு பெயர்ச்சி காரணத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அடுத்த 1 வருடம் நல்ல பலன்கள் கிடைக்கும். தாம்பத்திய உறவில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். நிதி ஆதாயம் உண்டாகும். பதவி, பணம், செழிப்பு ஆகியவை கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
கடகம்: குரு பகவான் உதயமானது கடக ராசிக்காரர்களுக்கும் நன்மை தரும். சிலருக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கலாம். சமூகத்தில் பதவி, கௌரவம் உயரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூகத்தில் புகழ் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு உதயம் மற்றும் குரு பெயர்ச்சி மிகவும் லாபகரமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் நிறைவடையும். முயற்சிகள் நல்ல பலனைத் தரும். செல்வம் பெருகும். வங்கி இருப்பு அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். தாம்பத்தியத்தில் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் கிடைக்கும்.
கும்பம்: குரு பகவானின் உதயம் கும்ப ராசிக்காரர்களுக்கும் பல விஷயங்களில் நல்ல பலன்களை அளிக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். குறிப்பாக தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள். தொழிலில் மாற்றம் ஏற்படலாம். திருமண வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்துடன் ஆன்மீகப் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
குரு பகவானின் அருள் பெற, 'குரவே சர்வ லோகானாம், பிஷஜே பவ ரோகினாம் நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ!' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.