குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது குரு பார்வை.... குபேர யோகம் ஆரம்பம்!!
குரு பகவான்: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவானுக்கு மிக முக்கியமான இடம் உள்ளது. குரு பகவான் வியாழன் என்றும் அழைக்கப்படுகிறது. குரு மகிழ்ச்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் கிரகமாக கருதப்படுகிறார்.
மேஷத்தில் குரு பகவான்: குரு பகவான் ஏப்ரல் 22 அன்று மேஷ ராசியில் பெயர்ச்சியாகி அங்கு அமர்ந்துள்ளார். இப்போது செப்டம்பர் 4 வரை அவர் இந்த ராசியில் இருப்பார். செப்டம்பர் 4, 2023 முதல், குருவின் வக்ர பெயர்ச்சி துவங்கும். மீனத்தில் குருவின் வக்ர பெயர்ச்சி மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.
ராசிகளில் தாக்கம்: குரு மேஷ ராசியில் இருப்பதும், பின்னர் செப்டம்பரில் மீனத்தில் வக்ர பெயர்ச்சி அடைவதும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளுக்கு இது அதிகப்படியான நற்பலன்களை அளிக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: குரு பகவானின் வக்ர இயக்கத்தால், மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும். புதிய வருமான வழிகள் கிடைக்கும். தொழிலதிபர்கள் பொருளாதார ரீதியாக லாபம் அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். மாணவர்களுக்கு அதிக வெற்றி கிடைக்கும்.
மிதுனம்: குருவின் வக்ர பெயர்ச்சி, மிதுன ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் பல குவியும் காலமாக இருக்கும். தனியார் வேலை செய்பவர்கள் வாழ்வில் நல்ல காலம் தொடங்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மிதுன ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த காலத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கு முழுப் பலன் கிடைக்கும். இந்த காலத்தில் நீங்கள் முதலீடு செய்யும் இடங்களில் பொருளாதார நன்மை ஏற்படும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பு உண்டு.
மீனம்: மீன ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலை தொடர்பான எந்த ஒரு வேலையும் நல்ல பலனைத் தரும். நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.