ஜாக்பாட் வாழ்க்கை, பண வரவு: சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிகளுக்கு பம்பர் லாபம்
சனி பகவான்: மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் அனைத்து கிரகங்களையும் விட மிக மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார்.
சனி வக்ர பெயர்ச்சி: சனி ஜூன் 17, 2023 அன்று வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். நவம்பர் 4, 2023 வரை அவர் இந்த நிலையிலேயே இருப்பார். சனி தற்போது கும்ப ராசியின் வக்ர நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக தாக்கம்: சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகம் ஆவார். இந்த வகையில், அனைத்து கிரகங்களையும் விட சனி பகவான் தான் ஒவ்வொரு ராசியிலும் அதிக நாட்களுக்கு இருப்பார் என்பதால் அவருடைய தாக்கம் அனைத்து ராசிகளிலும் அதிகமாக இருக்கின்றது.
ராசிகளில் தாக்கம்: சனி பக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், 3 ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சுபமாக இருக்கும். நவம்பர் 4, 2023 வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிலை பலன்களைத் தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்: சனியின் வக்ர நிலை ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இவர் சனியின் நண்பன். சனியின் வக்ர சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களின் தொழிலில் பெரும் முன்னேற்றத்தைத் தரும். உத்தியோகத்தில் கவர்ச்சிகரமான சலுகைகளைப் பெறலாம். உங்கள் வருமானம் கூடும். வியாபாரம் விரிவடையும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
துலாம்: துலாம் ராசிக்கு அதிபதியும் சுக்கிரன் என்பதால் சனியின் வக்ர இயக்கம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிக பலன்களைத் தரும். ஒன்றன் பின் ஒன்றாக பல இனிமையான செய்திகளைப் பெறுவீர்கள். தொழிலில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்படும். வாழ்வில் ஆடம்பரமும் வசதிகளும் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
மகரம்: மகர ராசிக்கு சனி பகவான் மற்றும் சனியின் வக்ர இயக்கம் நல்ல பலன்களைத் தரும். இந்த காலத்தில் மகர ராசிக்காரர்களுக்கு வெற்றி அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். தடைபட்ட பணிகள் முடிவடையும். உங்களின் பதவியும் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழிலில் ஏற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். விரும்பிய பதவி உயர்வும் பணமும் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.