சனி உதயம்: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம், அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்

Tue, 05 Mar 2024-9:53 am,

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். இவர் ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால், இவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கின்றது.

தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் இருக்கிறார். இவர் வரும் 18 ஆம் தேதி கும்பத்திலேயே உதயமாகவுள்ளார். பொதுவாகவே கிரகங்களில் உதயம் மிக சுபமானதாக பார்க்கப்படுகின்றது.

சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் உருவாகும். இவர்கள் வாழ்க்கையில் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சனி உதயம் மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். போட்டித்  தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். 

சனியின் உதயம் ரிஷப ராசியினருக்கு நன்மை பயக்கும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக பெறுவீர்கள். இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். குழந்தைகளால் நல்ல செய்தி கிடைக்கும். 

துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் மிக சிறப்பாக இருக்கவுள்ளது. நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். நிதி நிலை மேம்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். பணி இடத்தில் சனி அருளால் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. 

தனுசு ராசிக்காரர்கள் சனியின் உதயத்தால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்ததனை நாட்களாக இருந்து வந்த நிதி பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணத்தால் அனுகூலமான நன்மைகளை காண்பீர்கள். 

 

சனி தோஷம் விலகவும், ஏழரை சனியில் நிவாரணம் பெறவும் இந்த ஸ்தோத்திரத்தை சொல்லாம்: ‘நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்! ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்!!’

சனி பகவானை மகிழ்விக்க சனிக்கிழமைகளில் சனி சாலிசா, ஹனுமான் சாலிசா ஆகியவற்றை கூறலாம். ஏழைகளுக்கு உதவுபவர்களை சனி பகவான் சோதிப்பதில்லை. மேலும் தனக்கென மட்டும் யோசிக்காமல் பிறருக்கும் தான தர்மங்களை செய்பவர்களை சனி பகவான் கைவிட மாட்டார். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link