மீண்டும் மாறும் குரு.... உதயமாகி இந்த ராசிகளை உச்சம் தொட வைப்பார், அதிர்ஷ்டம் ஆரம்பம்!!
கிரகங்களில் குரு பகவானுக்கும் சனி பகவானுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. சனி பெயர்ச்சியும் குரு பெயர்ச்சியும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன.
திருமண வாழ்க்கை, குழந்தைகள், வேலை, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணி கிரகமான குரு பகவான் மனிதர்களின் வாழ்வில் பல வித நல்ல பலன்களை அளிக்கிறார். குரு அருள் ஒருவர் மீது இருந்தால், அந்த நபரின் வாழ்வில் மகிழ்ச்சிக்கும், வெற்றிகளுக்கும் பஞ்சமிருக்காது.
மே 1 ஆம் தேதி குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். சுமார் 13 மாத காலம் அவர் இந்த ராசியில் இருப்பார். இதற்கிடையில் அவரது நிலைகளில் சிறிய மாற்றங்கள் காணப்படும். குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
குரு பகவான் மே 7 ஆம் தேதி அஸ்தமனமானார். அவர் இனி ஜூன் 6 ஆம் தேதி காலை 4:36 -க்கு உதயமாகவுள்ளார். குரு உதயத்தால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது.
குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான சுப விளைவுகள் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குரு உதயம் லாபகரமானதாக இருக்கும். வியாபாரிகள் குரு உதயத்தால் அபரிமிதமான பலனை அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய உயரங்களை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நடந்துமுடியும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி பொருளாதார நிலை மேம்படும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு உதயத்தால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளின் லாபகரமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இவற்றால் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் செயல்திறன் நன்றாக இருக்கும். மேல் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
தனுசு ராசிக்காரர்கள் குருபகவானின் உதயத்தால் பல நன்மைகளை அடையப் போகிறார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்களின் பணி பாராட்டப்படும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நம்பிக்கை கூடும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும்.
குரு உதயத்துடன் சமீபத்தில் நடந்த குரு பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு குரு பெயர்ச்சியால் நல்ல பலன்களும் சில ராசிகளுக்கு சுமாரான பலன்களும் கிடைக்கும். எனினும் சில ராசிகளுக்கு குரு அருளால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
குரு பகவானின் அருள் பெற, 'குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.