சனி உச்ச ஆட்டம் இன்னும் 115 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம், பணமழை
நீதியின் கடவுளான சனி பகவான் நவம்பர் 16 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனியின் வக்ர நிவர்த்தியால் ஏற்படப் போகும் ஷஷ ராஜ்யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏற்படுத்தும். இது சில ராசிகளுக்கு சுப விளைவுகளையும் சில ராசிகளுக்கு அசுப விளைவுகளையும் அளிக்கும்.
மேஷம்: சனி வக்ர நிவர்த்தியால் உருவாகப் போகும் ஷஷ ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த சாதகமான பலன் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு இருக்கும். சரியான முயற்சியால் புதிய வருமான வழிகள் உருவாகும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தாள் லாம்பம் கிடைக்கும். வெளிநாட்டில் வியாபாரம் செய்யும் வாய்ப்பை பெறுவீர்கள்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு ஷஷ ராஜயோகத்தால் அதீத பலன் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் சம்பள உயர்வுடன், பதவி உயர்வையும் பெறலாம். இதனால் வருமானம் உயரும். நிதி விஷயங்களில் தன்னிறைவு இருக்கும். திருமணம் ஆகலாம். குடும்பச் சூழல் மிகவும் ஆதரவாக இருக்கும்.
துலாம்: சனி வக்ர நிவர்த்தியால் உருவாகப் போகும் ஷஷ ராஜயோகத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடு செய்ய நல்ல நேரம். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தொழில் சாதகமாக நடக்கும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியுடன் இருக்கும்.
தனுஷ்: சனி பகவனால் உருவாகப் போகும் ஷஷ ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். பக்தி அதிகரிக்கும், இதனால் சமய நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். தொற்று நோயிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவைப் பெறுவீர்கள். உடல்நலக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.
மகரம்: சனி வக்ர நிவர்த்தியால் உருவாகப் போகும் ஷஷ ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய இடத்தில் வேலை வாய்ப்பு பெறலாம். உத்தியோகத்தில் போனஸ் அல்லது பாராட்டுகளை பெறலாம். புதிய பொறுப்புகளைப் பெறலாம். நிதி நெருக்கடியில் விடுப்படுவீர்கள்.
சனி தேவரின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யலாம். குறிப்பாக. "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ", - 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.