MK Stalin Thirumavalavan Meeting: ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசிய பழைய வீடியோ ஒன்று மீண்டும் அவரது X பக்கத்தில் பதிவிடப்பட்டதை தொடர்ந்து அரசியல் களத்தில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியது. அது அட்மினால் பகிரப்பட்டிருக்கலாம் என திருமாவளன் விளக்கமளித்திருந்தாலும், மது ஒழிப்பு மாநாடு நடத்துவது மற்றும் அதில் பாஜக, பாமகவை தவிர்த்து அதிமுகவுக்கு அழைப்பு விடுப்பது ஆகியவை திமுக கூட்டணியில் இருந்து அவர் வெளியேறுவதற்கான சமிக்ஞைகள் என பேசப்பட்டது.
இந்நிலையில், முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த செப். 14ஆம் தேதி காலை சென்னை திரும்பினார். இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து வருகை தந்த மு.க. ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று சென்னை அண்ணா அறிவாயலயத்தில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பு பெரும் அரசியல் கவனத்தை பெற்றது.
இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணண் தளபதி @mkstalin அவர்களை சந்தித்து "தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசமைப்புச் சட்ட உறுப்பு எண் 47ன்-படி தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தேன்.… pic.twitter.com/KmFUk9A1D9
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 16, 2024
இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்த்து வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தோம். முதலமைச்சரின் அமெரிக்கா பயணத்தில் 19 ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க பயணம். அக்டோபர் 2ஆம் தேதி விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைக்க உள்ளோம். டாஸ்மாக் விற்பனை இலக்கை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை. இரண்டாவது, அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு என்ன 147 படி படிப்படியா தான் மாதவிலக்கை இந்தியாவில் படிப்படியாக கொண்டு வர மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும். மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் போதை பொருட்கள் தவிர வேறு எதுவும் பயன்படுத்த கூடாது என்பதுதான் 147 விதி ஆகும்" என்றார்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில்... pic.twitter.com/T3sn0ahPEz
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 16, 2024
திமுக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எந்த விரிசலும், நெருடலும் இல்லை என பதிலளித்தார். விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் பங்கேற்கிறார்கள் என்றும் திருமாவளன் தகவல் அளித்தார்.
மேலும் தொடர்ந்து அவர்,"மதுவிலக்கு கொள்கையில் பேரறிஞர் அண்ணா உறுதியாக உடும்பு புடியாக இருந்தார். 75 வது ஆண்டு பவள விழா காண இருக்க கூடிய நிலையில் இந்திய ஒன்றிய அரசுக்கு தேசிய மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம். தேர்தலுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, திமுகவிற்கு மாநாட்டிற்கு நேராக அழைப்பு கொடுக்கவில்லை. ஒரு கட்சி ஒரு கூட்டணிக்கான பிரச்சனை இல்லை இது. மக்களுக்கான பிரச்சனை யாரெல்லாம் மக்களுக்காக குரல் கொடுக்க நினைக்கிறார்களோ அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கலாம்" என்றார். மேலும், இந்த சந்திப்பின்போது திருமாவளவன் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் மட்டும் தனியே 10 நிமிடங்கள் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ