அயோத்தி குழந்தை ராமர் முழு அலங்காரத்தில்... பிரதிஷ்டைக்கு பின் வெளியான புகைப்படங்கள் உள்ளே!
Ayodhya Ramar Idol Full Photo After Pran Praththista: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையால் ராமர் கோவில் கட்டப்பட்டது. இன்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.
ராமர் கோவிலில் வைக்கப்பட்ட ராமர் சிலை 51 இன்ச் மற்றும் 1.5 டன் எடை உள்ள குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை கர்நாடக மாநிலம் மைசூரு நகரை சேர்ந்த அருண் யோகிராஜ் என்பவரால் வடிக்கப்பட்டது.
பிரதமர் மோடி முன்னிலையில் 5 வயதான குழந்தை ராமர் சிலை இன்று பிரான் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூன்று தளங்களாக கட்டப்பட உள்ள இந்த கோவிலின் தரை தளம் மட்டும் நிறைவடைந்துள்ளது. முன்னதாக ராமர் சிலையின் கண்ணில் கட்டப்பட்ட துணி பிரதிஷ்டைக்கு பின் அகற்றப்பட்டது.
தரை தளத்தில் வைக்கப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. முதல் தளம் அடுத்து கட்டப்பட உள்ள நிலையில் அங்கு சீதை, லக்மணன், ஹனுமன் ஆகியோருடன் ராஜ கோலத்தில் ராமர் சிலை வைக்கப்பட உள்ளது.
பிரதமர் மோடி தாமரை மலர்களை கொண்டு குழந்தை ராமர் சிலையை பூஜித்தார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பிரதமர் மோடி உடன் இருந்து வழிபாடு செய்தனர்.
முன்னதாக, இன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலையின் புகைப்படம் ஓரிரு நாள்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியானது.
மேலும், கண்கள் துணியால் மூடாமல் திறந்திருக்கும் நிலையில் ராமர் சிலையின் புகைப்படங்கள் வெளியானதால் அதற்கு எதிர்ப்பும் எழுந்தது.