Ramar Idol: ராஜகம்பீரத்துடன் ஸ்ரீராமர்... தங்கத்தில் வில் அம்பு - சிலையின் முழுமையான புகைப்படம் உள்ளே!

Fri, 19 Jan 2024-4:57 pm,

Ayodhya Shri Ramar Idol With Golden Bow & Arrow: உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் ராமர் கோவில் (Ramar Temple) கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.  

 

மக்களின் நன்கொடையை பெற்று சுமார் ரூ. 900 கோடி செலவில் இந்த ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அயோத்தி ராமர் கோவிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், 11 ஆயிரம் தொழிலதிபர்கள், தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 

வரும் ஜன. 22ஆம் தேதி உத்தரப்பிரதேசம், கோவா, ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், மத்திய அரசின் அலுவலகங்கள், நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவைக்கும் வரும் ஜன.22ஆம் தேதி அன்று மதியம் 2.30 மணி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

 

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நாடே தயாராகி வரும் சூழலில், கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையின் முதல் புகைப்படம் நேற்று வெளியானது. எனினும், சிலையின் மீது துணிகள் சுற்றப்பட்டு இருக்கும் புகைப்படமே முதலில் வெளியானது. இந்த சிலையின் உயரம் 5.1 இன்ச் ஆகும். சிலையின் எடை 1.5 டன் ஆகும்.

 

இந்நிலையில், ராமர் சிலையின் முழுமையான புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, குழந்தை அவதாரத்தில் இருக்கும் ராமர் கையில் வில் மற்றும் அம்பை வைத்திருக்கிறார். அந்த வில் மற்றும் அம்பு தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதே கல்லில் செய்யப்பட்ட தாமரையின் மீது ராமர் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link