Bad Cholesterol: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ எச்சரிக்கையா இருக்கணும்
பல சமயங்களில் அதிக கொலஸ்ட்ராலுக்கான காரணங்கள் இரத்தம் உறைதல் வரை செல்கிறது. இந்த ஆபத்துகளைத் தவிர்க்க, நீங்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். சில குறிப்பிட்ட அறிகுறிகள் உங்கள் உடலில் தெரியத்தொடங்கினால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, உங்கள் தமனிகளில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. இது நரம்புகளில் இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. கை, கால் விரல்களுக்கு சரியான ரத்தம் கிடைக்காததால், நகங்களின் நிறம் வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான இந்த அறிகுறியை புறக்கணிக்காதீர்கள்.
உங்கள் கால்கள் மரத்துப் போகத் தொடங்கும் போது, அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம். அதாவது இரத்த ஓட்டம் மற்றும் தமனிகள் வழியாக ஆக்ஸிஜன் விநியோகத்தில் அடைப்பு உள்ளது என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம். இதன் காரணமாக, கால்களில் வலி மற்றும் அவற்றின் உணர்வின்மை, கூச்ச உணர்வு ஆகியவை ஏற்படுகின்றது.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உயர் இரத்த அழுத்தத்துடன் நேரடியாக தொடர்புடையது. இரத்தத்தில் கொழுப்பு எவ்வளவு அதிகமாகிறதோ, அந்த அளவுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏனென்றால், கொலஸ்ட்ரால் காரணமாக ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது. இதயத்துக்கு ரத்தத்தை பம்ப் செய்ய தமனிகள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆகையால் உயர் இரத்த அழுத்தம் கெட்ட கொலஸ்ட்ராலுக்கான மிக முக்கியமான அறிகுறியாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)