இந்த ராசிக்காரர்களை மட்டும் சனி பகவான் அதிகம் படுத்துவார்

Sat, 12 Nov 2022-6:01 am,

கடக ராசி: கண்டக சனியில் இருந்து தப்பிய கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியின் ஆதிக்கம் ஆரம்பிக்கப்போகிறது. கணவன் மனைவி இடையேயான சிக்கல் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை.

சிம்ம ராசி: நீங்கள் சேவை சார்ந்தவராகவும் கடின உழைப்புடனும் இருக்க வேண்டியது அவசியம். 

விருச்சிக ராசி: வண்டி வாகனங்களில் போகும் போது கவனம். வண்டி வாகனம் வாங்கும் போதும் விழிப்புணர்வு அவசியம். அர்த்தாஷ்டம சனி என்பதால் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். சனி பகவான் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.

மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து பாத சனி ஆரம்பிக்கிறது. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. சிலருக்கு வாக்கினால் பிரச்சினை உண்டாகும். பண பிரச்சினையில் சிக்க வைக்கும்.

கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் பயணிக்கும் போது எச்சரிக்கையும் விழிப்புணர்வும் அவசியம்.

மீன ராசி: உங்களுக்கு திடீர் விரைய செலவுகள் உண்டாகும். அத்துடன் உங்களுடைய பேச்சில் கவனமும் நிதானம் அதிகளவு தேவை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link