சனி உதயம்: இந்த ராசிளுக்கு வாழ்வில் டென்ஷன், குடும்பத்தில் குழப்பம், நேரம் சரியில்லை
சனியின் உதயத்தால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடினமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி வரக்கூடும். முதலாளி அல்லது நிறுவனம் உங்களுக்கு வேலை அழுத்தத்தை அதிகரிக்கலாம். இந்த நேரத்தில், உங்கள் நம்பிக்கையும் பலவீனமாக இருக்கும்.
சனியின் உதயத்தால் உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரலாம். இந்த சூழ்நிலையில் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்படும். ஊதாரித்தனமாக செலவு செய்தால், உங்கள் நிதி நிலை மோசமடையலாம்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலை அல்லது வியாபாரத்தில் அதிர்ஷ்டம் ஆதரிக்காது. இதன் காரணமாக நீங்கள் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் மனைவியுடன் சரியான முறையில் பழகுங்கள், இல்லையெனில் உறவு கெட்டுவிடும்.
சனியின் உதயத்தால் குடும்பத்தில் சொத்துக்களில் தகராறு ஏற்படலாம். சகோதர, சகோதரி உறவில் பாதிப்பு ஏற்படும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தையும் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு உங்கள் கூட்டாளியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதனால் வியாபாரம் பாதிக்கப்படலாம். இந்த காலத்தில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.