Balaji Murugadoss: அடுத்த ஆண்டு படம் ரிலீஸ் - பிக்பாஸ் பாலாஜியின் அப்டேட்

Thu, 02 Jun 2022-4:00 pm,

மாடலிங் துறையில் இருந்த பாலாஜி முருகதாஸ், விஜய் டிவி பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டார். இதில் இவருக்கு பெரிய புகழ் வெளிச்சம் கிடைத்தது.

பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்த இவர், ஆரியுடன் மோதலில் ஈடுபட்டு இறுதியில் பரிசையும் தட்டிச் சென்றார்.

 

 

பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். வீட்டில் அபிராமியுடன் அதீத நட்பாக இருந்தார். இதன் மூலம் பிக்பாஸ் வீட்டிலேயே சண்டைகள் உருவானது.

 

இப்போது, பிக்பாஸ்அல்டிமேட் முடிந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், வெள்ளித்திரை அறிமுகம் குறித்து கூறியுள்ளார்.

 

சினிமாவில் எப்போது அறிமுகம் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அடுத்த ஆண்டு ரிலீஸ், சம்பவம் செய்வோம் எனக் கூறியுள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link