நாள் முழுவதும் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும்... சில `சூப்பர்` உணவுகள்...!
Energy Boosters: உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சத்தான காலை உணவை சாப்பிடுங்கள். அன்றைய நாளை ஹெவியான உணவுடன் தொடங்கக்கூடாது. இதன் மூலம், நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களுக்கு சோர்வு என்பதே ஏற்படாது.
பாதாம்: காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்குவதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகின்றன, அவை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. பாதாமை இரவு முழுவதும் ஊறவைப்பது அதன் ஊட்டச்சத்து மதிப்பை மேலும் அதிகரிக்கிறது.
பேரீச்சம்பழம்: பேரீச்சம்பழங்கள் ஆற்றலின் சுரங்கம் என்று அழைக்கப்படுகின்றன. நீங்கள் ஆற்றலுடன் நாளைத் தொடங்க விரும்பினால், பேரீச்சம் பழம் சாப்பிடுவது ஒரு சிறந்த வழி. பேரீச்சம்பழத்தில் உள்ள சத்தான நார்ச்சத்து உங்களுக்கு உடனடி ஆற்றலைத் தருவது மட்டுமல்லாமல், உங்கள் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனைகளை நீக்குகிறது.
சியா விதைகள்: சிறிய தோற்றம் கொண்ட சியா விதைகளில் ஏராளமான புரதச்சத்து உள்ளது. சியா விதைகளில் உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளன. ஒரு ஸ்பூன் சியா விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் சாப்பிடுங்கள்.
பப்பாளி: பப்பாளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது. பப்பாளியில் டீடாக்ஸ் தன்மை உள்ளது. வயிற்றை சுத்தப்படுத்த உதவுகிறது. பப்பாளி சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடுவதை தவிர்க்கவும். பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையும் நீங்கும்.
வாழைப்பழம்: வாழைப்பழம் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் களஞ்சியம். இதில் கார்போஹைட்ரேட், இயற்கை சர்க்கரை மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதனால், அவை நீடித்த நிலையான ஆற்றலை வழங்குகின்றன. நாள் முழுவ்து புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.