விஜய்யின் தாயுடன் பிக்பாஸ் வனிதா மற்றும் ஜோவிகா! வைரல் புகைப்படங்கள்..
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதையடுத்து தற்போது சில படங்களில் நடித்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.
தனது தாயை போலவே, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்து பிரபலமானவர் ஜோவிகா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விஷயங்களும் இவர் செய்த செயல்களும் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டன.
ஜோவிகா, தற்போது டீன்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை பார்த்திபன் இயக்குகிறார். இந்த படத்தின் முக்கிய விழா ஒன்று சமீபத்தில் நடைப்பெற்றது. இதில், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய்யின் தாயார் ஷோபாவும் வருகை தந்திருந்தார். அவருடன் வனிதா விஜயகுமார் எடுத்திருந்த செல்ஃபி.
வனிதா, 1995ஆம் ஆண்டு வெளியான ‘சந்திரலேகா’ படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்திருந்தார். இவரது குடும்பமும் நடிகர் விஜய்யின் குடும்பமும் சினிமா பின்னணியை சேர்ந்தது என்பதால், இவர்கள் குடும்ப நண்பர்களாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஷோபாவுடன் எடுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள வனிதா, அவருடன் நிறைய பேசியதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
வனிதா வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.