தோனியிடம் உதவி கேட்டு வந்துள்ள பிசிசிஐ! என்ன சொல்ல போகிறார் தல?

Wed, 22 May 2024-10:10 am,

டி20 உலகக் கோப்பைக்கு பிறகு தற்போதுள்ள தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை அழைத்துள்ளது.

 

தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், நியூஸிலாந்து வீரர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

எனவே அவரை சம்மதிக்க வைக்க எம்எஸ் தோனியின் உதவியை பிசிசிஐ நாடியுள்ளதாக கூறப்படுகிறது. ஃப்ளெமிங் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இருந்து வருகிறார்.

 

மேலும் பல ஆண்டுகள் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். எனவே தோனி மூலம் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அவரை விண்ணப்பிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

 

இருப்பினும், ஃப்ளெமிங் தலைமை பயிற்சியாளராக வருவாரா என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனெனில், 2027 வரை அவர் இந்திய அணியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு விரைவில் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தற்போதுள்ள ராகுல் டிராவிட்டும் ஆரம்பத்தில் பயிற்சியாளராக வர ஆர்வம் காட்டவில்லை. பிறகு பலரது வற்புறுத்தலின் பேரில் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார். ஃப்ளெமிங் தற்போது உலகம் முழுவதும் உள்ள நான்கு வெவ்வேறு T20 அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

 

இவரை தவிர தலைமை பயிற்சியாளராக கெளதம் கம்பீர், ஜஸ்டின் லாங்கர், மஹேலா ஜெயவர்த்தனே போன்ற மூத்த வீரர்களும் தேர்வாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link