விண்வெளியின் மாயங்களை மந்திரஜாலமாய் படம் பிடித்த புகைப்படக்காரர்கள்
இந்த ஆண்டின் பால்வெளி புகைப்படக் கலைஞர் போட்டி மிகவும் சுவராசியமாக இருந்தது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து கலந்துக் கொண்ட புகைப்படங்களில் இரவு வானத்தின் அழகையும் சிக்கலான தன்மையையும் படம்பிடிக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன
நமீபியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
வெற்றி பெற்ற 25 படங்கள் வெளியிடப்பட்டுள்ளது
"நவீன கேமராக்கள் இரவு வானத்தில் நம் கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு துடிப்பான விவரங்களையும் வண்ணங்களையும் பிடிக்க முடியும். எவ்வாறாயினும், எந்தவொரு சிறந்த படத்திலும் உண்மையில் முக்கியமானது கேமராவின் பின்னால் உள்ள புகைப்படக் கலைஞர், படத்தை உயிர்ப்பிப்பதற்கான யோசனை, திட்டம் மற்றும் படைப்பாற்றலை வழங்குகிறார், ”என்று கேப்சர் தி அட்லஸ் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.
தொகுப்பின் முதல் புகைப்படம் யேமனின் சொகோட்ராவில் இருந்து எடுக்கப்பட்டது.
மரங்களுக்கு இடையில் இருந்து நட்சத்திரங்கள் பிடிக்கப்படுகின்றன. வானம் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் உள்ளது. படம் நிச்சயம் உங்களை பிரமிக்க வைக்கும்
இளஞ்சிவப்பு வானம்