இதய தமனிகளில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட ‘சூப்பர்’ ஜூஸ்கள்!
சில ஜூஸ்கள் கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டவை ( Cholesterol Home Remedies). இவை இதய தமனிகளில் சேரும் கொழுப்புகளையும் அழுக்குகளையும் வடிகட்டி, பல தீவிர பிரச்சனைகளில் இருந்து இதயத்தை காக்கிறது.
பீட்ரூட் சாறு: உடலில் உள்ள அழுக்குகள் மற்றும் நரம்புகளில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க, தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது சிறந்தது. இந்த ஆரோக்கியமான சாறு கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க ஆரஞ்சு ஜூஸ் அருந்தலாம். உடலில் உள்ள அனைத்து கொழுப்புகளையும், அழுக்குகளையும் அகற்ற ஆரஞ்சு பெரிதும் உதவும். அதுமட்டுமின்றி, இது கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் கருதப்படுகிறது.இந்த நன்மைகளை கருத்தில் கொண்டு, உங்கள் உணவில் ஆரஞ்சு சாற்றை சேர்க்கலாம்.
காலையில் மாதுளம் பழச்சாறு குடிப்பதால் இரத்த சோகை நீங்குவது மட்டுமின்றி இதய ஆரோக்கியமும் மேம்படும். தினமும் ஒரு டம்ளர் மாதுளை சாறு குடித்து வந்தால், கொலஸ்ட்ராலை குறைக்கலாம். எனவே, மாதுளை சாற்றை உங்கள் உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளவும்.
தக்காளி: ஆயுர்வேதத்தில், தக்காளி பல கடுமையான நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும் திறன் பெற்றது என கூறப்பட்டுள்ளது. கொலஸ்ட்ரால் பிரச்சனையை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட தக்காளி ஜூஸை தினமும் அருந்துவது இதய ஆரோக்கியத்திற்கு மிக சிறந்தது.
சியா விதை நீர்: சியா விதைகள் கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு அருமருந்து. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க இது உங்களுக்கு மிகவும் உதவும். சியா விதை தண்ணீரை தினமும் குடிப்பது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.