பச்சை வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
பச்சை வாழைப்பழங்களில் அதிக மாவுச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது, இது செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலசிக்கலை தடுக்கிறது. இதில் அதிகமாக நிறைந்துள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
பச்சை வாழைப்பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் உடலுக்கு போதுமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைத்து உடல் ஆற்றலை மேப்படுத்துகின்றன.
பச்சை வாழைப்பழங்களில் 40% பி6 சத்து நிரம்பியுள்ளது, இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதுடன், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகள் பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடுவதை தவிர்த்து பழுக்காத வாழைகளை வேகவைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம்.