ஆஸ்டியோபோரோஸிஸ் முதல் இரத்த சோகை வரை... வெறும் வயிற்றில் ஊற வைத்த 4-5 பேரீச்சம்பழம் போதும்
பேரீச்சம்பழத்தில், நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, இரும்புச்சத்து ஆகியவை அடங்கியுள்ள நிலையில், இது உடலை பலவிதமான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. அதிலும் ஊற வைத்த பேரீச்சம்பழம், அதிக ஊட்டச்சத்து கொண்டது. ஏனெனில் ஊற வைத்தால், ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகும்
ஆற்றலின் சிறந்த ஆதாரம்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும். பேரீச்சம்பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
எலும்பு ஆரோக்கியம்: எலும்புகளை வலுப்படுத்த உதவும் , காலல்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கூறுகள் பேரீச்சம்பழத்தில் காணப்படுகின்றன. வயதான காலத்தில்ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டு வலி ஏற்படாமல் இருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதய ஆரோக்கியம்: பேரீச்சம்பழம், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன், இதய நோய்கள் வருவதையும் குறைக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக்கி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மலச்சிக்கல்:பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும்.
இரத்த சோகை: பேரீச்சம்பழத்தில் இரும்புச் சத்து அதிகமாகக் காணப்படுவதால், இரத்த சோகையை நீக்குகிறது. ஊற வைத்த பேரீச்சம்பத்தை தினமும் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும்.
இளமை: பேரிச்சம்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன, அவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், உடலில் இருந்து நச்சுகளை நீக்கி சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுத்து, இளமையை காக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: பேரீச்சம்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இதனால் சளி மற்றும் பிற பொதுவான நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.