இனி வெங்காயத் தோலை தூக்கி எறிய வேண்டாம்! இந்த விஷயங்களுக்கு உதவும்!
பொதுவாக வெங்காயத்தில் அதிக நல்ல குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவை பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
வெங்காயத்தில் மட்டுமின்றி அதன் தோல்களிலும் நிறைய சத்துக்களும் பயன்களும் உள்ளது. அவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்
வெங்காயத்தின் தோலை தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு அதனை முடிக்கு தடவி வந்தால் தலையில் உள்ள பொடுகு தொல்லை நீங்கும்.
கற்றாழை சாற்றுடன் வெங்காயத் தோலை சேர்த்து முடிக்கு தடவி வந்தால், முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. மேலும் தலையில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது.
வெங்காயத்தின் தோல்களில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும்.
வெங்காயத் தோலை தண்ணீரில் ஊற வைத்து அதனை ஈ மற்றும் கொசு இருக்கும் இடத்தில் தெளித்தால் அவை மீண்டும் வராது.