Autm 1.0: பதிவு, DL இல்லாமல் இந்த மின்சார பைக்கை ஓட்டலாம்: வெறும் 10 பைசாவில் 1 km பயணம்
இந்த வாகனம், சுற்றுச்சூழலுக்கு ஏதுவான வாகனமாக, பாதுகாப்பான மற்றும் சுத்தமான எரிபொருள் இயக்கத்திற்கான ஸ்மார்ட் வாகனமாக இருக்கும் என்று Atumobile Pvt Ltd கூறுகிறது. இது 100% 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டது'. குறுகிய தூர பயணத்திற்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று, வெறும் ரூ .3,000 க்கு இதை ப்ரீ-ஆர்டர் புக்கிங் செய்ய முடியும். இந்த வாகனத்தை வாங்க வேண்டாம் என வாடிக்கையாளர்கள் திடீரென முடெவெடுத்தால், இந்த தொகை மீண்டும் அளிக்கப்படும். இந்த இலகுரக பைக்கின் எடை 35 கிலோ ஆகும்.
Atum 1.0 இன் ஆரம்ப விலை ரூ .54,999 ஆகும். இதில், வாடிக்கையாளர் ஷிப்பிங் மற்றும் ஜிஎஸ்டி தொகையை கூடுதலாக செலுத்த வேண்டும். பின் கோட் கிடைப்பதன் அடிப்படையில் இந்த பைக்கை இந்தியா முழுவதும் வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. Atum 1.0 க்கு ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்த முடியும். அதன் விலை நகரத்துக்கு நகரம் மாறுபடக்கூடும்.
Automobile Pvt Ltd படி, இது குறைந்த வேக மின்சார பைக் ஆகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆகும். ஸ்டாப் அண்ட் கோ வகை பயணங்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். குறைந்த வேகம் கொண்ட மினாசார பைக்காக இருப்பதால், இதற்கு பதிவு அல்லது ஓட்டுநர் உரிமம் தேவைப்படாது. இது ஒரு இலகுரக பேட்டரியைக் கொண்டுள்ளது.
Atum 1.0-இல் 48V, 26Ah போர்ட்டபிள் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இதில் 250W மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரியின் சிறப்பு என்னவென்றால், அதை மாற்ற முடியும். இது 3-4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யப்படும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், இதில் 100 கிமீ பயணிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. வாடிக்கையாளர் பேட்டரியில் 2 வருட உத்தரவாதத்தைப் பெறுவார். பேட்டரியின் மொத்த எடை 6 கிலோ ஆகும்.
Atumobile Pvt Ltd-ன் Atum 1.0 பைக்கை இயக்குவதற்கான செலவு பெட்ரோல் பைக்கை விட மிகக் குறைவு என்று நிறுவனம் கூறுகிறது. நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கும் தகவலின் படி, இந்த பைக்கை ஓட்டுவதற்கான செலவு ஒரு கிமீ-க்கு 10 பைசா ஆகும். அதாவது, இந்த பைக்கில் 100 கிமீ வரை பயணம் செய்ய ரூ. 7-10 ரூபாய்தான் செலவாகும்.