யூரிக் அமிலம் எகிறுதா, மூட்டு வலி படுத்துதா: சரி செய்ய மருந்தே வேண்டாம், இந்த உணவுகள் போதும்
உடலில் பல வித பிரச்சனைகளை ஏற்படுத்தும் யூரிக் அமிலத்தை சில எளிய, இயற்கையான வழிகளிலும் குறைக்கலாம். உணவில் மாற்றங்களைச் செய்வதன் மூலமும் யூரிக் அமிலத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் சில உணவுப் பொருட்களைப் பற்றி இங்கே காணலாம்.
யூரிக் அமிலத்தை குறைக்க முழு தானியங்கள் ஒரு நல்ல வழியாக கருதப்படுகின்றன. ஓட்ஸ், பார்லி, கினோவா மற்றும் பிரவுன் அரிசி போன்ற முழு தானியங்கள் யூரிக் அமிலத்தைக் குறைக்கும். இவை சத்தான கார்போஹைட்ரேட்டுகளின் நல்ல ஆதாரங்களாக உள்ளன. முழு தானியங்களில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விட குறைவான அளவில் பியூரின்கள் உள்ளன.
நெல்லிக்காய்: நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைத் தடுப்பது மட்டுமல்லாமல், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது. நெல்லிக்காய் யூரிக் அமில அளவையும் குறைக்கிறது. ஆகையால் யூரிக் அமில நோயாளிகள் குறைந்தது ஒரு நெல்லிக்காயையாவது சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
கொத்தமல்லி: கொத்தமல்லி இலைகள் உடலில் படிந்துள்ள யூரிக் அமில படிகங்களை அகற்ற உதவுகிறது. சிறுநீருடன் யூரிக் அமிலத்தை நீக்கும் தன்மை கொத்தமல்லி இலைக்கு உள்ளது. யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் கொத்தமல்லி டீ அல்லது கொத்தமல்லி தண்ணீரை உட்கொள்ளலாம்.
யூரிக் அமில படிகங்களை நீக்குவதில் வேம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேம்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும், மூட்டு வலியை குணப்படுத்தவும் உதவியாக இருக்கும். உடலில் உள்ள நச்சுகளை அனைத்தையும் வேம்பு நீக்குகிறது.
தினசரி உணவில் மீன் சாப்பிடுவது யூரிக் அமில அளவைக் குறைக்கும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவும் இவை உதவுகின்றன. இதன் காரணமாக, நச்சுகள் அகற்றப்படுகின்றன. இதன் விளைவாக, யூரிக் அமிலம் உடலில் இருந்து எளிதில் வெளியேற்றப்படுகிறது.
ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து உட்கொள்வதால், யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கலாம். மேலும், இவற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல் உருவாவதை தடுக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.