யூரிக் அமிலத்தை ஈசியா குறைக்க இந்த உணவுகள் போதும்: ட்ரை பண்ணி பாருங்க
சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை போல, யூரிக் அமிலத்தையும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். இல்லையென்றால், இதனால் பல வித பிரச்சனைகள் ஏற்படக்கூடும். யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில இயற்கையான எளிய வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமாகும். அதுவும் யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும்.
கொய்யாவில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் அதிக யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. கொய்யா ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் கலந்து குடிப்பதால் உடலில் காரத்தன்மை அதிகரிக்கிறது. இது சிறுநீரக கற்களை கரைத்து கீல்வாதத்தை போக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது.
ப்ரோக்கோலியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் இதை தினமும் உட்கொள்ளலாம். யூரிக் அமில அளவை குறைக்க பெரிதும் உதவும் ப்ரோக்கோலி மலச்சிக்கல் மற்றும் எடை இழப்புக்கும் உதவும்
ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடைய ஸ்ட்ராபெர்ரி யூரிக் அமில நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும். இதை தினமும் உட்கொள்வது யூரிக் அமிலத்தின் சீரான வெளியேற்றத்தை உறுதிப்படுத்தும்.
ஆப்பிள் சைடர் வினிகரில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல வித பண்புகள் உள்ளன. இது யூரிக் அமில அளவை குறைக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து தினமும் குடிக்கலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.