மருந்தே வேண்டாம்... யூரிக் அமிலம், மூட்டு வலிக்கு `பை` சொல்ல இந்த பழங்களுக்கு `ஹாய்` சொன்னால் போதும்
இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை போல, யூரிக் அமிலத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் அது பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்.
பல எளிய வழிகளில் யூரிக் அமில அளவையும் அதனால் ஏற்படும் மூட்டு வலியையும் கட்டுப்படுத்த முடியும். யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில பழங்கள் பற்றி இங்கே காணலாம்.
வாழைப்பழம்: யூரிக் அமிலத்தின் அபாயத்தைத் தவிர்க்க விரும்பினால், தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். வாழைப்பழம் சாப்பிடுவதால் பியூரின் அளவு குறைகிறது. வயிற்றுப் பிரச்சனை இருந்தாலும் இதை உட்கொள்ளலாம். வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்.
ஆப்பிள்: கோடை காலமோ, குளிர்காலமோ எதுவாக இருந்தாலும் தினமும் ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஆப்பிளில் நார்ச்சத்து உள்ளது. இது சீரான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். ஆப்பிள் யூரிக் அமிலம் சேராமல் தடுக்கும் ஒரு பழமாக கருதப்படுகின்றது. ஆப்பிள் சாப்பிடுவதால் தினசரி வேலைகளுக்கான ஆற்றலும் கிடைக்கிறது.
நாவல் பழம்: கோடை காலம் என்பது நாவல் பழங்களுக்கான காலமாகும். நாவல் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது. இதனால் யூரிக் அமில அளவு கட்டுப்படுத்தப்பட்டு மூட்டு வலியும் குறைகிறது.
கிவி: புளிப்பு மற்றும் ஜூசி பழமான கிவி யூரிக் அமில நோயாளிகளுக்கு அதிக நன்மை பயக்கும். கிவி சாப்பிடுவதன் மூலம் யூரிக் அமிலத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம். வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பொட்டாசியம் ஆகியவை கிவியில் உள்ளன. இதன் காரணமாக, உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நச்சுகள் உடலை விட்டு எளிதில் வெளியேற்றப்படுகின்றன. தினமும் கிவி சாப்பிடுவதால் யூரிக் அமிலம் கட்டுக்குள் இருக்கும்.
செர்ரி: யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த செர்ரிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செர்ரிகளில் உள்ள சிறப்பு பண்புகள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. செர்ரிகளில் வைட்டமின் பி-6, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி மற்றும் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.