வேகமாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்
)
ஆரோக்கியமான, இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைப்பது மிக நல்லது. எளிதாக தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
)
உடல் எடை குறைய தேவையான செயல்பாடுகளுக்கு இஞ்சி உதவுகிறது. பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய இஞ்சி நீரை தினமும் குடிப்பதால், கலோரிகள் வேகமாக குறைகின்றன. இதன் காரணமாக இயற்கையான, ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்கலாம்.
)
இளநீரை ஒரு முறை குடித்தால், நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு இருக்கிறது. இதன் காரணமாக தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இந்த காரணங்களால் எடை பட்டிப்படியாக குறைகிறது.
கடல் உப்பை தண்ணீரில் கலந்து குடிப்பதால் உங்கள் பசியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இது பசியை குறைத்து உணவு உட்கொள்ளலை கட்டுக்குள் வைக்கிறது. ஆகையால் தண்ணீரில் சிறிது கடல் உப்பு சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை குடித்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். எனினும் ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே இதை செய்ய வேண்டும்.
கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால், தொப்பை கொழுப்பு விரைவில் குறைக்கிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி தொப்பையை குறைக்க உதவுகிறது. இதற்கு டேன்டேலியன் டீ உட்கொள்ளலாம். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி எடையை குறைக்க உதவுகிறது.
உணவை மெதுவாக மென்று சாப்பிட்டால், உடல் உணவை ஜீரணிப்பது எளிதாகிறது. இது உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்கிறது. உணவு விரைவில் செரிமானம் ஆனால், தொப்பை கொழுப்பும் விரைவாக குறையும்.
உடலில் கார்டிசோல் அதிகமாக இருந்தால், தொப்பையை குறைப்பது கடினமான பணியாகிவிடும். போதுமான தூக்கம் இல்லையென்றால் கார்டிசோலை அதிகமாகும். ஆகையால், உடல் எடையை குறைக்க தினமும் போதுமான அளவு தூங்குவது அவசியமாகும். போதுமான அளவு தூங்கினால், மன அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம். இதனால், கார்டிசோல் அளவு குறைந்து, தொப்பை கொழுப்பும் குறையும்.
தொப்பையை குறைக்க, உணவில் கார்போஹைட்ரேட்டுகளை குறைக்க வேண்டியது மிக அவசியமாகும். கார்போஹைட்ரேட்டுகளை ஜீரணிக்க அதிக நேரம் ஆகும் என்பதால், கொழுப்பை குறைக்க அதிக நேரம் ஆகும். ஆகையால், கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள பாஸ்தா, ரொட்டி மற்றும் அரிசிக்கு பதிலாக, புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது. இது வயிற்றுக்கு நிறைவான உணர்வை அளித்து தேவையற்ற்ற பசியை குறைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.