LDL கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்க
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ள நபர்கள் சில எளிய, இயற்கையான வழிகளில் அதற்கு தீர்வு காணலாம். தினமும் இரவில் சில குறிப்பிட்ட உணவுகளை உடொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து, குறிப்பாக பீட்டா-குளுக்கன் அதிகமாக உள்ளது. இவை எல்டிஎல் கொழுப்பைக் குறைப்பதில் திறம்பட செயல்படுகின்றன. கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ள நபர்கள் காலை உணவாகவும் இரவு உணவாகவும் ஓட்ஸ் உட்கொள்வது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
பாதாம் எல்டிஎல் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும் மற்றொரு ஆற்றல்மிக்க உணவாகும். அவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஈ ஆகியவவை அதிகமாக உள்ளன. இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. தொடர்ந்து பாதாம் சாப்பிடுவது எல்டிஎல் அளவைக் குறைத்து ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் சமநிலையை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொழுப்பு நிறைந்த மீன்: சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை இதய ஆரோக்கியத்திற்கான பல நன்மைகளை அளிக்கின்றன. ஒமேகா-3 கொழுப்பு அமிலன்ங்கள், ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவும். உங்கள் இரவு உணவில் அல்லது மாலை சிற்றுண்டியாக இந்த மீன்களை சேர்ப்பது எல்டிஎல் கொழுப்பைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும்.
அவகேடோ பழங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. ஏனெனில் அவற்றில் இதயத்திற்கு நல்லதாக கருதப்படும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இந்த கொழுப்புகள் எல்டிஎல் கொலஸ்ட்ரால் (LDL Cholesterol) அளவைக் குறைக்கும் அதே வேளையில் நல்ல கொழுப்பான எஹ்டிஎல் கொலஸ்ட்ராலை (HDL cholesterol) அதிகரிக்க உதவுகின்றன. இரவில் அவகேடோ சாப்பிடுவது கொலஸ்ட்ராலை நிர்வகிக்க உதவும் ஒரு ஆரோக்கியமான வழியாக இருக்கும்.
அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் போன்ற பெர்ரி வகை பழங்களில் ஆண்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இந்த கூறுகள் வீக்கத்தைக் குறைக்கவும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும் உதவும். உங்கள் இரவு நேர வழக்கத்தில் ஒரு கிண்ணம் பெர்ரிகளை சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு மகிழ்ச்சியான வழியாகும்.
இந்த சூப்பர்ஃபுட்களில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. அவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். உங்கள் இரவு நேர உணவில் இந்த ஐந்து சூப்பர்ஃபுட்களைச் சேர்ப்பது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
இருப்பினும், உங்கள் தினசரி வழக்கத்தில் எந்த மாற்றங்களை செய்தாலும், அதற்கு முன், ஒரு மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.