நவம்பர் மாதத்தில் கண்டிப்பாக போகவேண்டிய சூப்பரான இடங்கள்!

Wed, 02 Nov 2022-8:52 pm,

கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற இடமான ஆலப்புழா சுற்றுலா பயணிகள் விரும்பும் சிறந்த இடமாகும், கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமையான இடங்கள், போட் ஹவுஸ்கள், கரையோர கிராம வாழ்க்கை என இயற்கை எழில்கொஞ்சும் அழகான இடமாக இது உள்ளது.

 

மேகாலயாவில் உள்ள கரோ ஹில்ஸ் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இருக்கும், இந்த நவம்பர் இங்கு திருவிழா நடைபெறும் அதில் பாரம்பரிய மேளம், கொம்புகள், நடனங்கள் போன்ற பல பொழுதுபோக்கான நிகழ்ச்சிகளை கண்டு மகிழலாம்.

 

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிறிய நகரமான பிர் பில்லிங் பாராகிளைடிங் செய்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது.  இங்கு ட்ரெக்கிங், பாராகிளைடிங், மவுண்டன் பைக்கிங் மற்றும் ஹேண்ட் க்ளைடிங் போன்ற பல சாகச விளையாட்டுக்களை விளையாடலாம்.

 

டாமன் கடற்கரையை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத் தலமாகும், நவம்பர் மாதத்தில் இருந்து இந்த பகுதியில் சுற்றுலா பருவம் தொடங்குகிறது.  இங்கு நீச்சல், சன் பாத் போன்றவை எடுத்துக்கொள்ள சிறப்பாக இருக்கும்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link