IPL: ஐபிஎல் தொடரில் கொடுத்த காசுக்கு மேல் விளையாடும் வீரர்கள்...

Mon, 22 Apr 2024-1:19 am,

ஐபிஎல் தொடர்தான் முதன்முதலில் கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடும் வழக்கம் ஆரம்பித்தது. இதன்மூலம் ஒரு வீரர் என்பவர் கிரிக்கெட் சந்தையில் பிரான்சைஸ் அணிகளுக்கு தேவையான ஒரு பண்டமாக மாறிப்போனார். அந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் குறைந்த சம்பளத் தொகையை பெற்று சிறப்பாக விளையாடி வரும் 6 வீரர்களை இங்கு காணலாம். 

 

ஷஷாங்க் சிங்: நிச்சயம் இவரின் பெயர் உங்களுக்கு தெரிந்திருக்கும். கடந்த மினி ஏலத்தில் பெயர் குழப்பத்தில் எடுக்கப்பட்ட வீரர் ஷஷாங்க். இருப்பினும் இந்த தொடரில் பட்டையை கிளப்பி வருகிறார். 7 போட்டிகளில் 187 ரன்களை அடித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 179.80 ஆகும். இவரின் சம்பளம் ரூ.20 லட்சமாகும்.

 

அஷுடோஷ் ஷர்மா: பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தற்போது சிறப்பாக விளையாடி வரும் வீரர்களில் ஒருவர். வெறும் ரூ.20 லட்சம் அடிப்படைத் தொகைக்கு எடுக்கப்பட்ட இவர் இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி மொத்தம் 159 ரன்களை அடித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 189.3 ஆகும். மும்பை அணிக்கு எதிரான 193 ரன் சேஸிங்கில் 21 பந்துக்கு 61 ரன்களை அடித்ததுதான் இவரின் அதிகபட்ச ஸ்கோராகும். துரதிஷ்டவசமாக அந்த போட்டியில் மும்பை வெற்றி பெற்றது. 

சாய் சுதர்சன்: தமிழ்நாட்டின் நட்சத்திர வீரர், டிஎன்பிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போனவர், சிஎஸ்கே அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 96 ரன்களை அடித்தவரும், இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தூணாக இருப்பவரும்தான் சாய் சுதர்சன். ஆனால் ஐபிஎல் தொடரில் இவரின் சம்பளம் ரூ.20 லட்சமே.

 

நிதிஷ் ரெட்டி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான புது வரவுதான் நிதிஷ் ரெட்டி. கடந்த சில போட்டிகளாக ஹைதராபாத்திற்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். குறிப்பாக, வேகப்பந்துவீச்சு பிளஸ் பவர்ஹிட்டர். இத்தகைய இந்திய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிடைத்தது ஹைதராபாத்துக்கு பெரும் பலம் தான். எனினும் இவரின் சம்பளம் ரூ.20 லட்சம் தான்.

 

மயங்க் யாதவ்: லக்னோ அணிக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த இந்திய அணிக்கே மயங்க் யாதவ் ஒரு வரப்பிரசாதம் தான். 150 கி.மீ., வேகத்தில் தொடர்ச்சியாகவும், சீராகவும் பந்துவீசக்கூடியவராக உள்ளார், மயங்க் யாதவ். இருப்பினும், காயம்தான் சிறிய பிரச்னை. இருப்பினும், அதில் இருந்து குணமடைந்து விரைவில் அணியுடன் இணைவார். இவரின் சம்பளமும் ரூ. 20 லட்சம் தான்.

 

ஃப்ரேசர்-மெக்குர்க்: மேலே பார்த்த அனைவரும் இந்திய வீரர்கள் என்றால், இவர் ஆஸ்திரேலிய வீரர். டெல்லி அணி பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடிக்கு பதில் ப்ரேசர்-மெக்குர்கை வெறும் ரூ.50 லட்சத்திற்கு தூக்கியது. 3 போட்டிகளில் 140 ரன்கள் அடித்துள்ளார். 222 ஸ்ட்ரைக் ரேட் ஆகும்.  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link