தொப்பை கொழுப்பை சொல்லி அடிக்கும் சூப்பர் மசாலாக்கள்: கண்டிப்பா உணவில் சேருங்க
உடல் பருமன் என்பது பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இதை சரி செய்ய மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்கிறார்கள், பல வித கடினமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சில எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.
நமது இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் சில பாரம்பரிய மசாலா பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக அளவிலான நன்மைகளை அளிக்கின்றன. இவற்றில் சில மசாலாக்கள் கலோரிகளை வேகமாக எரித்து அதன் மூலம் உடல் எடையை குறைக்கின்றன. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் மசாலாக்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மஞ்சளில் குர்குமின் உள்ளது. இதில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. கலோரிகளை குறைப்பதிலும் உடல் எடையை குறைப்பதிலும் இது உதவுவதோடு, இரத்த சர்க்கரை அளவையும் இது கட்டுக்குள் வைக்கின்றது.
இஞ்சியில் உஷ்ணத்தன்மை உள்ளது. இது உடலின் சீதோசன நிலையை அதிகரிக்க உதவுகின்றது. உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கலோரிகளை விரைவாக அகற்ற இஞ்சி பெரிய அளவில் உதவும். இது மட்டுமின்றி உடல் உப்பசத்தை சரி செய்து கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கவும் இஞ்சி உதவுகின்றது.
கருப்பு மிளகில் பைப்பரின் உள்ளது. உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்பு சேர்வதை இது தடுக்கின்றது. கருப்பு மிளகை உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டால் கலோரிகள் வேகமாக எரிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் விரைவாக தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைக்கலாம்.
ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ள சீரகம் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி செரிமானத்தை சீராக்குகின்றது. கலோரிகளை விரைவாக எரிக்கவும் தொப்பை கொழுப்பை குறைக்கவும் இது உதவுகின்றது. அவ்வப்போது சீரகத் தண்ணீர் குடித்து வந்தால். கலோரிகளின் அளவு ஏறாமல் இருக்கும் அதன் மூலம் உடல் எடையையும் வேகமாக குறைக்கலாம்.
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் தினமும் இலவங்கப்பட்டை தண்ணீரை குடிக்கலாம். தண்ணீரில் இலவங்கப்பட்டையை போட்டு கொதிக்க வைத்து அதை வடிகட்டி அருந்தலாம். இது தவிர தேநீரிலும் இலவங்கப்பட்டை சேர்க்கலாம். கலோரிகளை வேகமாக எரித்து உடல் எடையை குறைக்க உதவுவதோடு இலவங்கப்பட்டை தொப்பை கொழுப்பை குறைக்கவும், கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது.
கடுகு ஒரு சக்தி வாய்ந்த மற்றும் உணவுக்கு சுவை கொடுக்கும் மசாலா ஆகும். இதை நாம் அநேகமாக அனைத்து வித உணவு வகைகளிலும் பயன்படுத்துகிறோம். ஆனால், இது உடல் எடை குறைக்க உதவும் என்பது பலருக்கு தெரிவதில்லை. வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கலோரிகளை எரிக்கவும் கடுகு பயன்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.