நரம்புகளில் குவியும் கெட்ட கொலஸ்ட்ராலை விரட்டி அடிக்கும் ஆரோக்கியமான உணவுகள்: டயட்டில் இவை அவசியம்
அவகேடோ பழத்தில் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது கெட்ட கொழுப்பை (எல்டிஎல்) நீக்குகிறது. இதுமட்டுமின்றி இது நல்ல கொழுப்பை (எச்டிஎல்) அதிகரிக்கிறது. அவகேடோ தமனிகளை சுத்தப்படுத்துவதோடு இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடைகளை நீக்குகிறது. இது உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது.
சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை வீக்கத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இதனுடன், இவை ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறன. இது ஒரு வகையான கொழுப்பாகும். இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. ஆனால் அது அதிகமானால், அது உடல் பருமனை ஏற்படுத்துவதோடு கெட்ட கொலஸ்ட்ராலையும் அதிகரிக்கச்செய்யும்.
பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்களில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இதுமட்டுமின்றி இவற்றில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தும் அதிகமாக உள்ளன. இவை தமனிகளில் அழுக்கு சேர விடாமல் காக்கின்றன. இவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுவதோடு உடலுக்கு இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன.
அவுரிநெல்லி, ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் பிற பெர்ரி வகைகளில் ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இவை இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. கெட்ட கொழுப்பை குறைக்க இவை உதவுவதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
கீரை, முட்டைக்கோஸ், அருகம்புல் போன்ற பச்சை இலை காய்கறிகளில் நைட்ரேட்டுகள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ளன. அவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இதனால் இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். இவற்றால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருப்பதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன.
பூண்டில் உள்ள அல்லிசின், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இரத்தக் கட்டிகளைத் தடுக்கவும் உதவுகிறது. இதன் காரணமாக பூண்டை உட்கொள்வதன் மூலம் தமனிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள முடிகின்றது. இது தவிர பூண்டில் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
மஞ்சளில் குர்குமின் என்ற சிறப்பம்சம் வாய்ந்த கலவை உள்ளது. இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை தமனிகளில் கொலஸ்ட்ரால் மற்றும் பிற அழுக்குகள் படிவதையும், தேங்குவதையும் அனுமதிக்காது.
ஓட்ஸ், கினோவா மற்றும் பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை கொழுப்பின் அளவைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. மேலும் முழு தானியங்கள் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் தமனிகளில் படிந்திருக்கும் அழுக்குகளும் சுத்தமாகும் என்ற செய்தி பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். அவற்றில் ஏராளமான ஃபிளாவனாய்டுகள் உள்ளன. அவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. அதன் நன்மைகளைப் பெற, குறைந்தது 70% கோகோ கொண்ட சாக்லேட் சாப்பிடுவது சிறந்தது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.