தெலங்கானாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய ’நெலகொண்டப்பள்ளி’
தமிழகத்தைப் போலவே அண்டை மாநிலங்களான கர்நாடாக, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பாரம்பரியம் மிக்க வரலாற்று சிற்பங்கள், குகைகள் கோவில்கள் உள்ளன.
அவற்றில் தெலங்கானாவில் இருக்கும் நெலகொண்டப் பள்ளியைப் பற்றி தெரிந்து கொள்வோம். வரலாற்று சிறப்பு மிக்க பல அரிய சுவடுகளைக் கொண்டிருக்கும் இந்திய நகரங்களில் ஒன்று நெலகொண்டப் பள்ளி.
தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநில எல்லைக்களுக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கும் கம்மம் மாவட்டத்தில் உள்ளது தான் இந்தப் பகுதி. புத்தர்கள் கட்டட கலைகளுக்கு சான்றாக இந்தப் பகுதி உள்ளது. 100 ஏக்கர் பரபளவிற்கு சுற்றுச்சுவர் மற்றும் அரிய சிற்பங்கள் இந்த பகுதியில் இருக்கும்.
ஓர் இடத்தில் மட்டுமல்லாமல் நெலகொண்ட பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் மூன்று கிராமங்களில் பல்வேறு வரலாற்று கட்டடங்கள் உள்ளன. பெரும் முயற்சி மற்றும் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு இந்த இடம் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.