மேஷத்தில் நுழையும் புதனால் சிக்கல்களை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!

Mon, 27 Mar 2023-7:12 pm,

புதன் கிரகம் நுண்ணறிவு, கல்வி, பகுத்தறிவு திறன் மற்றும் சிறந்த தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றுக்கான கிரகம் ஆகும். மார்ச் 31, 2023 அன்று மதியம் 02.44 மணிக்கு மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி ஆகிறார். சிலருக்கு இக்காலம் சவாலானதாக இருக்கும். புதன் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்:  ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஜாதகத்தில் புதனின் நிலை சாதகமாக இல்லாவிட்டால், மிகவும் எதிர்மறையான பலன்களை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது குழந்தைகளின் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படலாம். மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். இந்த நேரத்தில் உங்கள் பெயர் மற்றும் மரியாதை கூட பாதிக்கப்படலாம், எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி வாழ்க்கையிலும் ஏற்ற தாழ்வுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். இளைஞர்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், சில மோசமான போதை பழக்கத்திற்கு அடிமையாகலாம்.

கடகம்: புதனின் சஞ்சாரத்தால் உங்கள் வேலையை இழக்கும் வாய்ப்புகள் உள்ளன. செவ்வாய் கிரகத்தின் பாதகமான நிலை காரணமாக, உங்கள் நிலை அல்லது நற்பெயர் கூட கேள்விக்குறியாகலாம். இந்த நேரம் உங்களுக்கு கடினமாக இருக்கும்.பணியிடத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் சில கடினமான சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் நற்பெயரும் கெடலாம். கடக ராசிக்காரர்களுக்கு வேலை அழுத்தம் அதிகரிக்கலாம், அதனால் நீங்கள் மன அழுத்தத்தை உணரலாம். 

 

கன்னி: கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மோசமடையலாம். இந்த நேரத்தில் நீங்கள் புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டும், குறிப்பாக சொந்த தொழில் வைத்திருப்பவர்கள், ஏனெனில் புதனின் நிலை ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால், நீங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் தேவையற்ற வதந்திகளில் இருந்து விலகி இருங்கள், இல்லையெனில் உங்கள் இமேஜ் கெட்டுவிடும். 

கும்பம்:  புதனின் சஞ்சாரத்தால், கும்ப ராசியினருக்கு பொருளாதார ரீதியாக சவாலாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த வகையான பெரிய அல்லது அபாயகரமான முதலீட்டையும் தவிர்க்க வேண்டும். உங்கள் இளைய உடன்பிறந்தவர்களுடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஜாதகத்தில் புதனின் நிலை சாதகமற்றதாக இருந்தால், உங்களுக்கு சிரமங்கள் மேலும் அதிகரிக்கலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link