EPS Higher Pension: யாருக்கு அதிக இபிஎஃப் ஓய்வூதியம் கிடைக்கும்? இந்த வழியில் ஸ்டேடஸ் செக் செய்யலாம்
ஒரு ஊழியர் அதிக ஓய்வூதியத்திற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர் EPS ஓய்வூதியத் திட்டத்தில் முதலாளி / நிறுவனத்தின் தரப்பிலிருந்து அதிக பங்களிப்பைத் தேர்ந்தெடுக்கிறார். செப்டம்பர் 1, 2014 இல் EPF இல் உறுப்பினர்களாக இருக்கும் ஊழியர்கள், அதிக ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இது ஒரு தனி ஓய்வூதிய நிதியில் வைக்கப்படுகிறது. இது படிப்படியாக வட்டியுடன் வளர்ந்து, மொத்த ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கிறது.
ஆகஸ்ட் 31, 2014 வரை ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படாது. செப்டம்பர் 1, 2014 அன்று அல்லது அதற்குப் பிறகு இபிஎஸ்ஸில் சேர்ந்தவர்களுக்கு அதிக ஓய்வூதியத்தை தேர்ந்தெடுப்பதற்கான விருப்பம் கிடைக்கும்.
ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் தற்போதைய விதிகளின்படி, ஓய்வூதியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ. 15,000 ஆக உள்ளது. அதாவது ஒருவரின் சம்பளம் ரூ. 50,000 ஆக இருந்தாலும், ஓய்வூதியத்தில் ரூ.15,000 மட்டுமே முதலீடு செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1, 2014 இன் படி இபிஎஃப் உறுப்பினர்களாக (EPF Members) உள்ளவர்கள், தங்கள் அடிப்படை சம்பளத்தில் 8.33% -ஐ டெபாசிட் செய்து ஓய்வூதிய பலனை பெறலாம். எந்த பணியாளர்கள் தங்கள் வேலையின் போது பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தின் கீழ் அதிக சம்பளத்தில் பங்களித்து, ஓய்வு பெறும் முன் உயர் ஓய்வூதிய விருப்பத்தை தேர்வு செய்துள்ளார்களோ, அவர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.
சம்பள வரம்பான ரூ.5000 அல்லது ரூ.6500க்கு மேல் ஓய்வூதியம் பெறுவதற்கு இபிஎஸ்-க்கு பங்களித்த ஊழியர்கள் மட்டுமே இதன் கீழ் பலன்களைப் பெற தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள். உயர் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்துள்ள இபிஎஸ் சந்தாதார்ரகள் (EPS Subscribers) தங்கள் ஸ்டேடசை எப்படி டிராக் செய்வது என இங்கே காணலாம்.
உறுப்பினர்கள் முதலில் இபிஎஃப்ஓ மெம்பர் இ சேவா போர்ட்டலுக்குச் சென்று, திரையில் சிறிது கீழே ஸ்க்ரோல் செய்து, இடது பக்கத்தில் காணக்கூடிய Track application status for Pension on Higher Wages என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது ஒப்புகை எண், UAN, PPO எண் மற்றும் கேப்ட்சா குறியீடு போன்ற தேவையான விவரங்களை அங்கு நிரப்பவும்.
உங்கள் அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக ஆதார் எண், பயோமெட்ரிக் அல்லது ஒன் டைம் பின் (OTP) தரவை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்க தேர்வுப்பெட்டியில் கிளிக் செய்யவும்.
ஓய்வூதியக் கணக்கீடு EPS 95 -இன் 12வது பாராவின்படி செய்யப்படும். ஓய்வூதியம் தொடங்கும் தேதி, ஓய்வூதியம் பெறும் சேவை காலம், ஓய்வூதியம் பெறத்தக்க சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கான பொருந்தக்கூடிய சூத்திரத்தை நிர்ணயிக்கும்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒருவரின் இபிஎஃப் இருப்பு (EPF balance) அல்லது தனிப்பட்ட சேமிப்பிலிருந்து செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை மதிப்பிடுவதற்கு Excel பயன்பாட்டு அடிப்படையிலான கால்குலேட்டரை உருவாக்கியுள்ளது.
இந்த செய்தி உங்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களை பெற, சம்பந்தப்பட்ட ஆதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.