ஒரே நாளில் சனி பெயர்ச்சி, சூரிய கிரகணம்: இந்த 5 ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம், நல்ல காலம் ஆரம்பம்

Tue, 07 Jan 2025-9:42 am,

ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கபடுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படும் சனி பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி இரவு 10.01 மணிக்கு நடைபெறும். தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.

2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29, சனிக்கிழமை அன்று நிகழும். இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு கிரகணம் ஆரம்பம் ஆகி மாலை 6.13 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.

மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இவர்கள் வாழ்வில் அனைத்து வித மகிழ்ச்சியையும் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்: மேஷ ராசிக்கு சூரிய கிரகணமும், சனிப்பெயர்ச்சியும் பல நன்மைகளைத் தரும். சனியின் இந்த பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு அதிக நிதி பலன்களைத் தரும். குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு பணி இடம், குடும்பம், சமூகம் என அனைத்து இடங்களிலும் மரியாதையும் மதிப்பும் வெற்றியும் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். மேஷ ராசி வியாபாரிகளுக்கு இந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கும் லாபத்தால் வியாபாரத்தை அதிக அளவில் விரிவுபடுத்த வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்வில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியும் சூரிய கிரகணமும் நற்பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். பண வரவு அதிகமாகும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இதனால் நிதி நிலை நன்றாக இருக்கும். உத்யோகத் துறையில் முன்னேற்றம், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற வாய்ப்புள்ளது. வேலை தேடிக்கொண்டு இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறலாம்.

கடகம்: சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தின் தாக்கத்தால் கடக ராசிக்காரர்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும். கடக ராசிக்காரர்களுக்கு ஆன்மீக நிகழ்வுகளில் அதிக ஆர்வம் இருக்கும். இந்த நேரத்தில் பெரும்பாலும் கடவுளின் பணிகள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்துவார்கள். குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை மேம்படும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.

தனுசு: சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தின் தாக்கம் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். பணி இடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்கினாலும், தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வணிகத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த இதுவே சரியான நேரம். உடல் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். பெற்றோரின் வழிகாட்டலும் ஆதரவும் நீங்கள் செய்யும் பணியில் உங்களைப் பாதுகாக்கும். முதலீட்டில் நிச்சயம் லாபம் கிடைக்கும்.

மகரம்: சனி மற்றும் சூரியனின் இந்த அரிய சேர்க்கை மகர ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் லாபகரமாக உங்கள் கைகளுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல புதிய உத்திகளை கற்றுக் கொள்வார்கள், இதைத் தங்கள் பணியில் செயல்படுத்தி மூத்த அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். அதிக பொறுப்புகள், பதவி உயர்வுகள் போன்ற பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. வருமானம் இரட்டிப்பாகும். தொழிலை விரிவுபடுத்த பல வாய்ப்புகள் அமையும். வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்து அதிக பணம் சம்பாதிக்க வாய்பு கிடைக்கும்.

சனி பகவானின் அருள் பெற, “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும். மேலும், 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தையும் தினமும் கூறலாம்.

சூரிய பகவானின் அருள் பெற தினமும் காலையில் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யலாம். இது தவிர, 'ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி, தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்' என்ற சூரிய காயத்ரியை பாராயனம் செய்வதும் நல்லது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link