குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு 2025 புத்தாண்டில் குபேர யோகம், வெற்றிகள் குவியும்
சுப கிரகமாக இருக்கும் குரு பகவான் இப்போது ரிஷப ராசியில் உள்ளார். மே மாதம் அவர் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதற்கு முன்னதாக 2025 பிப்ரவரி மாதம் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள குரு வக்கிர நிவர்த்தி மற்றும் மே மாதம் நிகழவுள்ள குரு பெயர்ச்சி ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அற்புதமான நற்பலன்கள் ஏற்படும். இவர்கள் பலவித வெற்றிகளின் உச்சம் தொடுவார்கள். பணவரவு அதிகமாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இங்கே காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு பலவித நன்மைகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும்.
மிதுனம்: குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். வாழ்வில் பல நல்ல செய்திகள் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் பணியிடத்தில் பாராட்டும் மரியாதையும் அதிகமாகும் மூத்த அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஆதரவும் கிட்டும். உடல் நலம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வலுவான ஆதரவு இருக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் 2025 ஆம் ஆண்டு மங்களகரமானதாக இருக்கும். நிதிநிலை மேம்படும். தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிகப்படியான நன்மைகளை அளிக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளை பெறுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். பணியிடத்தில் பதிவு உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். திருமண வயதினில் இருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் கணவன் மனைவியிடையே அன்பும் புரிதலும் அதிகமாகும்.
குரு பகவானின் பரிபூரண அருளைப் பெற, 'குரவே சர்வ லோகானாம், பீஷஜே பவரோகினாம்; நிதயே சர்வ வித்யானாம், தக்ஷிணாமூர்த்தயே நமஹ' என்ர ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.