புதன் பெயர்ச்சி: இன்னும் 5 நாட்களில் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ராஜயோகம் ஆரம்பம்
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவை ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை.
புதன் கிரகம் புத்திக்கூர்மை, கல்வி, பேச்சாற்றல், அறிவாற்றல், படைப்பாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். ஒரு நபரது ஜாதகத்தில் புத்திக்கூர்மைக்கு காரணமாக இருக்கும் புதன் கிரகம் வலுவாக இருந்தால் அவர் அறிவாற்றல் நிறைந்த புத்திசாலியாக திகழ்கிறார்.
புதன் மார்ச் மாதம் 7 ஆம் தேதி காலை 8:38 மணிக்கு கும்ப ராசியிலிருந்து வெளியேறி மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இந்த பெயர்ச்சி காரணமாக புதன் மற்றும் ராகுவின் சேர்க்கை நடக்கும். இந்த சேர்க்கை மார் 25ஆம் தேதி வரை இருக்கும். அதாவது, ராகுவும், புதனும் மார்ச் 25 வரை ஒரே ராசியில் இருப்பார்கள்.
புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சிலருக்கு இதனால் சுப பலன்களும் சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும். எனினும் சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் வாழ்வில் அதிகப்படியான மகிழ்ச்சியை பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
புதன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரத்தில் திடீரென லாபம் இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி மிகவும் லாபகரமானதாக இருக்கும். அலுவலகத்தில் ஒரு முக்கியமான பணியை முடிப்பதற்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும்.
மீன ராசியில் புதனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு விசேஷ பலன்களை தரப்போகிறது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சகோதர சகோதரிகளுடன் உறவுகள் மேம்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
புதன் பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்க போகிறது. குடும்பத்தினருடன் அமைதியான மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு பெரிய ஒப்பந்தங்கள் கைகூடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் புரிதல் மேம்படும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள கும்ப ராசிக்காரர்களுக்கு வெளிநாடு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு விரும்பிய மதிப்பெண்கள் கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை