பண்டிகை கால தள்ளுபடியில் கில்லி... Realme மொபைல்களின் ஆப்பர்கள்!
Realme 11 5G: Realme நிறுவனத்தின் இந்த மொபைல் 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. போனில் ரூ.2000 தள்ளுபடி மற்றும் ரூ.2000 கூப்பன் ஆஃப் உள்ளது. 14,999 ரூபாய்க்கு இது விற்பனை செய்யப்படுகிறது.
ஸ்மார்ட்போன் 108MP பிரதான கேமரா மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) கூடிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 67W SUPERVOOC சார்ஜிங் வேகத்துடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Realme 11 Pro 5G: இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.20,999 முதல் தொடங்குகிறது. விற்பனையில், இந்த மொபைல் ரூ.1000 வங்கி தள்ளுபடி, ரூ.1000 கூப்பன் தள்ளுபடி மற்றும் ரூ.2000 தள்ளுபடி பெறுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.19,999.
மேற்கூறிய Realme 11 Pro மொபைல் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வளைந்த பார்வைக் காட்சியைக் கொண்டுள்ளது. இதில் 100MP OIS கேமரா மற்றும் Dimensity 7050 5G சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 50MP AI கேமராவுடன் 6.74 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 33W SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Realme Narzo N53: 1000 தள்ளுபடியில் இந்த போனை வாங்க வாய்ப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.200 தள்ளுபடியுடன் 7,799 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 8 ஜிபி RAM வரை 128 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும்.
Realme Narzo 60x 5G: Realme நிறுவனத்தின் இந்த மொபைலில் ரூ. 1250 தள்ளுபடி மற்றும் ரூ. 750 வங்கி தள்ளுபடி உள்ளது. 10,999 ரூபாய்க்கு விற்பனையில் வாங்கலாம். 6 ஜிபி வரை RAM கொண்ட இந்த மொபைல் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.
மேற்கூறிய ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 6100+ 5G செயலியுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதன் வலியே50MP AI கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6.72 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது.