மருமகள்கள் ஏன் தனிக்குடுத்தனம் போகிறார்கள் தெரியுமா? - மாமியார்களின் 5 பெரிய தவறுகள்
தற்போதெல்லாம் திருமண பேச்சை எடுத்தாலே பல பெண்கள் தனிக்குடித்தனத்தை பற்றிதான் பேசுகிறார்கள். சிலர் மட்டுமே மாமனார், மாமியார் உடன் வசிப்பதற்கு ஏற்றுக்கொள்கிறார்கள்.
அப்படியிருக்க, திருமணமான பின் மருமகள்கள் அதிகமாக தனிக்குடித்தனம் போக முடிவெடுப்பதற்கு புகுந்த வீட்டில் சிலர் செய்யும் இந்த 5 விஷயங்கள்தான் முக்கிய காரணம் ஆகும்.
முதலில் புகுந்த வீட்டில் மருமகளை அந்நியப்படுத்தும்படி நடந்துகொள்வதுதான் பெரிய தவறு. வீட்டு விஷயங்களை மறைப்பது, பொய் சொல்வது, மருமகளுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வது ஆகியவற்றை இதில் கூறலாம்
அதேபோல், எப்போதும் மருமகள் என்ன செய்கிறாள், வேலை செய்கிறாளா, படுத்து தூங்குகிறாளா, மொபைல் பார்க்கிறாளா என நோட்டம்விட்டுக் கொண்டே இருப்பது பெரிய தவறு. அவருக்கு என்ற தனியுரிமையை தடை செய்யக்கூடாது.
அதேநேரத்தில், மருமகளை தனிமையில் இருக்க வைக்கக்கூடாது. கோயில், பொது இடங்களுக்குச் செல்லும்போது மருமகளை மட்டும் விட்டுவிட்டு தனியே குடும்பத்துடன் செல்வதோ, சொல்லாமல் செல்வதோ பெரிய தவறாகும். இதன்மூலம் அன்பும், பாசமும் தடைப்பட்டுவிடும்.
அதேபோல், பக்கத்து வீட்டு பெண், தனது மற்ற மருமகள்கள், உறவினர் வீட்டு பெண்கள் ஆகியோருடன் உங்களின் மருமகளை ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்துவிடுங்கள். யாரையும் யாருடனும் ஒப்பிடுவது சரியாகாது. அது மனவேதனையை உண்டாக்கும்.
மருமகள் அணியும் உடை, மேக்அப் உள்ளிட்டவை குறித்து விமர்சிப்பதும் தவறுதான். ஒவ்வொருதரின் விருப்பத்திற்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். மற்றவர்களின் விருப்பங்களுக்கு தடையாக இருப்பதை விட கொடுமை வேறு ஏதுமில்லை.
பொறுப்பு துறப்பு: இவை பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.