ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோ

Wed, 26 Jun 2024-10:07 am,

மேஷம்: புதன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். அரசு நிறுவனங்களில் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். சர்ச்சைக்குரிய விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக முடிவுகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்தும் நல்ல செய்திகள் கிடைக்கும். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும். வாகனம் வாங்க நினைத்தால் அதற்கு கிரகப் பெயர்ச்சியும் சாதகமாக உள்ளன.

ரிஷபம்: புதன் பெயர்ச்சியால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும். புதிய நபர்களுடனான தொடர்பு அதிகரிக்கும், இதன் விளைவு இனிமையானதாகவும் தொலைநோக்குடையதாகவும் இருக்கும். ஆதரவற்ற மக்களுக்கு உதவ முன்வருவது நல்லது. இந்த நேரம் மாணவர்களுக்கும் சாதகமாக இருக்கும். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அட்டகாசமகா இருக்கும். புதன் உங்கள் பேச்சில் மென்மையைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், உங்கள் நிதி அம்சத்தையும் பலப்படுத்துவார். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியம், குறிப்பாக வயிறு மற்றும் தோல் தொடர்பான கோளாறுகள் குணமாகும். 

கடக ராசி: உங்கள் ராசியில் புதனின் செல்வாக்கால் பல எதிர்பாராத ஏற்ற இறக்கங்களை சந்திக்க வைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவது மட்டுமின்றி, சமூக அந்தஸ்தும் அதிகரிக்கும். புதிய விருந்தினர்களின் வருகையால் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சாதகமான பலன்களை பெறுவார்கள். மத்திய, மாநில அரசுத் துறைகளின் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும்.

சிம்மம்: புதன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக நீங்கள் எங்காவது நிதி இழப்பை சந்திக்க நேரிடலாம். இந்தக் காலகட்டத்தில் பெரிய கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். அரசுத் துறைகளில் இருந்தும் வருமான வரி தொடர்பான நோட்டீஸ் வரலாம். உயர் அதிகாரிகளுடனான உறவுகள் மோசமடைய வாய்ப்புள்ளது. 

கன்னி: புதன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு சுபமானதாக இருக்கும். மூத்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த சகோதரர்களின் ஆதரவும் கூடும். அரசுத் துறைகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீங்கள் விரும்பிய வெற்றியை அடையலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துக்கொண்டு முன்னேறினால் நீங்கள் வெற்றியடைவீர்கள். அரசாங்கத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

விருச்சிகம்: புதன் பெயர்ச்சியின் தாக்கம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்காக எடுக்கும் முயற்சிகளும் வெற்றி பெறும். உங்கள் தைரியம் மற்றும் துணிச்சலின் பலத்தால், கடினமான சூழ்நிலைகளைக் கூட நீங்கள் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். மாணவர்களுக்கும் நேரம் சாதகமாக இருக்கும். வெளியூர் சென்று படிக்கும் முயற்சியில் இருந்தால், கிரகப் பெயர்ச்சி அந்த கோணத்திலும் சாதகமாக இருக்கும்.

 

தனுசு: புதன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். திருமணப் பேச்சுக்கள் வெற்றிபெற அதிக நேரம் எடுக்கும். அரசின் திட்டங்களின் முழுப் பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால் அல்லது புதிய தொழில் தொடங்க விரும்பினால், இரண்டுக்கும் இப்போது நேரம் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பணியிடத்தில் சதிக்கு பலியாவதைத் தவிர்க்கவும்.

மகரம்: புதன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். சமூக கௌரவம் அதிகரிக்கும். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும். பணியிடம் தொடர்பான எந்த முடிவை நீங்கள் எடுக்க விரும்பினாலும், அந்தக் கண்ணோட்டத்தில் இந்த காலம் முற்றிலும் சாதகமாக இருக்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி கலவையான பலன்களை அளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். சொந்தக்காரர்கள் விரோதமாக நடந்து கொள்வார்கள். இந்த காலகட்டத்தில் யாருக்கும் அதிக கடன் கொடுக்க வேண்டாம், இல்லையெனில் பணம் சரியான நேரத்தில் கிடைக்காது. சர்ச்சைக்குரிய விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்கப்பட வேண்டும். முடிந்தவரை சச்சரவுகளில் இருந்து விலகி இருங்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். 

மீனம்: புதன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். நீங்கள் விரும்பிய வெற்றியை அடையலாம். பிள்ளைகள் தொடர்பான கவலைகள் விலகும். புது தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உயர்மட்டத் தலைமையுடனான உறவுகள் வலுப்பெறும். அரசுத் துறைகளின் எதிர்பார்த்த பணிகளும் நிறைவேறும். ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். சமூக அந்தஸ்தும் கௌரவமும் மேலும் அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link