8th Pay Commission அதிரடி அப்டேட்: ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ராக்கெட் வேகத்தில் உயரும்

Tue, 20 Jun 2023-9:50 am,

எட்டாவது ஊதியக் குழுவை நாடு முழுவதும் அரசு விரைவில் அமல்படுத்தக்கூடும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. தற்போது, ​​இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

8வது ஊதியக்குழுவுக்கு மோடி அரசு விரைவில் கிரீன் சிக்னல் கொடுக்கலாம். எட்டாவது ஊதியக் குழு இந்த ஆண்டிலேயே அதாவது 2023 இல் அமைக்கப்பட உள்ளதாகவும் சில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2013 ஆம் ஆண்டு 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு 2016-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்பட்டது. புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை செயல்படுத்தப்படுகின்றன. 

8வது ஊதியக் குழுவை மத்திய அரசு விரைவில் அறிவிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன் ஊழியர்களுக்கு அரசு பெரிய பரிசை வழங்கக்கூடும். 

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை உள்ளது. புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும். இதனுடன், சம்பள கமிஷன் அறிக்கையில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரும் அதிகரிக்கலாம்.

 

8-வது ஊதியக் குழு கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுடன் விரைவில் பேச உள்ளதாக மத்திய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், இதற்கான குறிப்பாணையும் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். 

கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்தால், மத்திய ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஓய்வூதியதாரர்கள் பங்கேற்கும் போராட்டத்தை தொழிற்சங்கம் பரிசீலிக்கலாம்.

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 42% அகவிலைப்படியை பெறுகிறார்கள். ஏஐசிபிஐ தரவுகளின் படி இது ஜூலை முதல் 46% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link