IPL 2024: 10 ஐபிஎல் அணிகளின் தலைமை பயிற்சியாளர்களும்... அவர்களின் சாதனைகளும்!
பஞ்சாப் கிங்ஸ்: ட்ரெவர் பேலிஸ் (இங்கிலாந்து) - 2019இல் இங்கிலாந்து அணி ஓடிஐ உலகக் கோப்பையை கைப்பற்றும்போது அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: ஜஸ்டின் லாங்கர் (ஆஸ்திரேலியா) - ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், டிம் பெய்ன் கேப்டன்ஸியின்போது தலைமை பயிற்சியாளராக இருந்து துவண்டுபோன ஆஸ்திரேலிய அணிக்கு புத்துயிர் அளித்தவர் இவர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சந்திரகாந்த் பண்டிட் (இந்தியா) - இவர் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் துரோணாச்சாரியார் என்று அழைக்கப்படுபவர். 2022இல் இவர் தலைமையில் மத்திய பிரதேசம் அணி ரஞ்சி டிராபியில் முதல்முறையாக கோப்பையை வென்றது.
குஜராத் டைட்டன்ஸ்: ஆஷிஷ் நெஹ்ரா (இந்தியா) - இந்த அணியின் பயிற்சியாளராக கடந்த 2 சீசனாக செயல்படுகிறார் நெஹ்ரா. குஜராத் அணி 2022இல் சாம்பியன் பட்டத்தையும், 2023இல் 2ஆவது இடத்தை பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து) - தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக உள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளராக இந்தாண்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ்: ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - ஆக்ரோஷமான கிரிக்கெட்டுக்கு பெயர் பெற்றவர் இவர். கேப்டன்ஸியில் இவர் படைக்காத சாதனைகளே இல்லை எனலாம். கிரிக்கெட் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்களில் இவரும் ஒருவர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: குமார் சங்கக்காரா (இலங்கை) - கடந்த சில சீசன்களாக ராஜஸ்தான் அணி முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்திற்கு மாற்றியுள்ளதற்கு காரணம் இவர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆண்டி பிளவர் (ஜிம்பாப்வே) - இவர் தலைமையில்தான் இங்கிலாந்து அணி தனது முதல் உலகக் கோப்பையான, டி20 உலகக் கோப்பையை 2010ஆம் ஆண்டு கைப்பற்றியது. உலகம் முழுவதும் பல லீக் அணிகளுக்கு பயிற்சியாளராக உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்: மார்க் பவுச்சர் (தென்னாப்பிரிக்கா) - தென்னாப்பிரிக்க தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். மேலும், டைட்ன்ஸ் என்ற தென்னாப்பிரிக்க உள்ளூர் அணிக்கு 5 முறை பல்வேறு கோப்பைகளை வாங்கிக்கொடுத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஸ்டீபன் ஃபிளமிங் (நியூசிலாந்து): 2009ஆம் ஆண்டில் இருந்து ஸ்டீபன் ஃபிளமிங் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக உள்ளார். இவரின் கீழ் 5 முறை சென்னை கோப்பையை வென்றிருக்கிறது. 2008இல் சிஎஸ்கே அணிக்காவும் இவர் விளையாடினார். 2008இல் சிஎஸ்கே அணிக்கு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கெப்ளர் வெசல்ஸ் பயிற்சியாளராக இருந்தார்.