DA Hike வரும் முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஷாக்: வார்ணிங் கொடுத்த அரசு

Tue, 18 Jun 2024-1:42 pm,

மார்ச் மாத உயர்வுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு அகவிலைப்படி (Dearness Allowance) குறித்த முடிவு அரசு எடுக்கும். ஆனால் இதற்கு முன் மத்திய ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது.

ஊழியர்கள் அலுவலகத்திற்கு தாமதமாக வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. மேலும், அடிக்கடி அலுவலகத்திற்கு தாமதமாக வருவோர் அல்லது அலுவலக நேரம் முடியும் முன்னரே அலுவலகத்திலிருந்து வெளியேறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எனேபிள்ட் பயோமெட்ரிக் வருகை அமைப்பில் (AEBAS) ஊழியர்கள் தங்கள் வருகையைக் குறிக்கவில்லை என்பது அரசுக்குத் தெரியவந்தது. இதுமட்டுமின்றி, சில ஊழியர்கள் தினமும் அலுவலகத்திற்கு தாமதமாக வருகின்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

இந்த உத்தரவில், மொபைல் போன் அடிப்படையிலான முக அங்கீகார முறையைப் பயன்படுத்த பணியாளர் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இது வருகையைப் பதிவு செய்வதைத் தவிர, அப்போது ஊழியர்கள் எங்கு இருக்கிறார்களோ, அந்த இடத்தை கண்டறிதல் அதாவது 'லைவ் லொகேஷன் டிடக்ஷன் மற்றும் ஜியோ-டேக்கிங்' போன்ற வசதிகளையும் வழங்குகிறது. இந்த உத்தரவின்படி, AEBAS -ஐ கண்டிப்பான முறையில் செயல்படுத்த சமீபத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

பலமுறை அலுவலகத்திற்கு தாமதமாக வருவது மற்றும் சீக்கிரம் கிளம்புவது போன்ற பழக்கத்தை தவிர்க்க வெண்டும் என்பதை தீவிரமாக எடுத்துக்கொள்வதோடு, அதை கைவிட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இதை செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனுடன், அனைத்து அரசுத் துறைகளும் ஊழியர்கள் தங்கள் வருகையை ஆதார் இயக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை முறையை (AEBAS) பயன்படுத்தி மட்டுமே தவறாமல் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

 

அவ்வாறு செய்வதன் மூலம் AEBAS இல் 'பதிவு செய்யப்பட்ட' ஊழியர்களுக்கும், 'உண்மையில் பணிபுரியும்' ஊழியர்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இருக்காது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து துறைத் தலைவர்களும் (HOD) தங்கள் ஊழியர்களுக்கு அலுவலக நேரம், தாமதமாக வருதல் போன்ற விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். 

அரசு இணையதளமான www.attendance.gov.in -இல் இருந்து துறைத் தலைவர்கள் தங்களது வருகை அறிக்கையை தவறாமல் பதிவிறக்கம் செய்து, மீண்டும் மீண்டும் அலுவலகத்திற்கு தாமதமாக வரும் அல்லது அலுவலக நேரம் முடியும் முன் வெளியேறும் ஊழியர்களைக் கண்டறிய வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி, ஒரு நாள் வருகை தாமதமானால், அரை நாள் சாதாரண விடுப்பு (Casual Leave) கழிக்கப்படும். 

ஊழியர்கள் ஒரு மாதத்திற்கு இரண்டு முறைக்கு மேல் தாமதமாக வந்து சரியான காரணத்துடன் வந்தால், அதிகபட்சமாக ஒரு மணிநேரம் தாமதமாக அது தள்ளுபடி செய்யப்படும். இந்த முடிவை அலுவலகத்தின் மூத்த அதிகாரி எடுக்கலாம். CL-ஐ கழிக்கப்படுவதத் தவிர, மீண்டும் மீண்டும் அலுவலகத்திற்கு தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படலாம். விதிகளின்படி, மீண்டும் மீண்டும் தாமதமாக வருவது தவறான நடத்தை விதிகளின் கீழ் வரும் என்பதால் இப்படி செய்யப்படுகிறது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link