இன்று சுக்கிரன் பெயர்ச்சி: யாருக்கு கொண்டாட்டம், யாருக்கு திண்டாட்டம்? மேஷம் முதல் மீனம் வரை... முழு ராசிபலன் இதோ
மேஷம்: சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைத் தரும். மேஷ ராசியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இந்தக் காலகட்டத்தில் பெரிய சாதனைகளைச் செய்வார்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த ராசியைச் சேர்ந்த திருமணமாகாதவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் நல்லுறவு சேர்ந்து திருமண யோகம் வரும். அரசு வேலைகளில் பணிபுரியும் மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் உயர் பட்டங்களைப் பெற வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்: சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நாகரீகம், ஊடகம், சேவை நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. ரிஷப ராசி இளைஞர்கள் இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் விலகி இருக்க முயற்சிக்கும் நபர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு உள்ளது. உங்கள் செலவுகள் அனைத்தும் தற்செயலாக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே கவனமாக இருங்கள்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். இறக்குமதி-ஏற்றுமதி மற்றும் ஃபேஷன் தொடர்பான வேலை செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் அதிக லாபத்தைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். அதாவது குழந்தைப் பேறுக்காக ஏங்கும் இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரத்தின் போது நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மிதுன ராசிக்காரர்கள் இந்தக் காலக்கட்டத்தில் வாசிப்புக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்கள் ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளைச் செய்து கொண்டிருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் கடக ராசிக்காரர்கள் அனைத்து ஒப்பந்தங்களை நன்றாக படித்துப் பார்த்து அவற்றில் கையெழுத்திடுவது நல்லது. கடன் அதிகமாக வாய்ப்ப்புகள் உள்ளன. செலவுகள் மீது கவனம் செலுத்துவது நல்லது.
சிம்மம்: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்கள் ஆன்மீகம், இசை மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய திசையில் உங்களை அழைத்துச் செல்லும் முக்கியமான நபர்களை நீங்கள் சந்திப்பீர்கள். குரு ஸ்தானத்தில் இருந்து வழி நடத்தும் ஒருவரின் அறிமுகமும் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
கன்னி: சுக்கிரன் பெயர்ச்சி, கன்னி ராசிக்க்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் வாகனம், சொத்து வனகும் யோகம் உண்டாகும். சுக்கிரனின் இந்த இயக்கத்தின் போது கன்னி ராசிக்காரர்களின் வீட்டில் சுப நிகழ்வுகளும், ஆன்மீக நிகழ்வுகளும் நடக்க வாய்ப்புள்ளது.
துலாம்: துலாம் ராசியை சேர்ந்த தகவல் தொடர்பு துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். இந்த ராசியைச் சேர்ந்த இளைஞர்கள் அனைவரையும் தங்கள் பக்கம் ஈர்ப்பார்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். இக்காலக்கட்டத்தில் இவர்களது பணி அனைவராலும் பாராட்டப்படுவதோடு உங்கள் நற்பெயர் மேலும் உயர வாய்ப்புள்ளது.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் புதிய கூட்டாளிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே கூட்டாண்மையில் பணிபுரிந்திருந்தால் அல்லது ஏற்கனவே ஒரு கூட்டாளர் இருந்தால், எச்சரிக்கை அவசியம். இந்த நேரத்தில் உங்கள் வேலைகளில் அனைத்து வகையான ஆவணங்களையும் சரியாக வைத்திருப்பது முக்கியம். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் திருமண யோகம் வரும். உங்கள் வார்த்தைகளால் அனைத்து விதமான பிரச்சனைகளையும் நீக்கி வெற்றி பெறுவீர்கள்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஆதாயங்களை அளிக்கக்கூடிய வகையில் அமையும். இந்த காலகட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும் யோகம் உள்ளது. ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் அசிடிட்டி, தைராய்டு அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்தக் காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மகரம்: மகர ராசியை சேர்ந்தவர்கள் இந்த காலகட்டத்தில் சில பிரச்சனைகளின் சுழலில் சிக்க வாய்ப்புள்ளது. உயர்கல்விக்காக காத்துக்கொண்டு இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் நல்ல யோகம் வரும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம், சண்டை வர வாய்ப்பு உள்ளது. இது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தை ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள்.
கும்பம்: தனுசு ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி கும்ப ராசிகாரர்களுக்கு ஆக்கப்பூர்வமான நன்மைகளை அளிக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் வியாபாரம் செய்யும் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதில் வெற்றி காண்பார்கள். வேலை தேடும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல பதவியுடன் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் உங்கள் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் வேலையில் தங்கள் நிலையில் மாற்றத்தை சந்திக்கலாம். எனவே பணியிடத்தில் விதிகளை பின்பற்றுவது நல்லது. இல்லையெனில் உங்கள் வேலையை இழக்க நேரிடும். எனவே இந்த காலகட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.