IND vs ENG: இந்திய அணியின் பலவீனங்கள் இதுதான்... 3ஆவது போட்டியில் என்ன செய்ய வேண்டும்?

Wed, 07 Feb 2024-12:08 am,

"தொடரில் நீங்கள் ஒரு 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறீர்கள் என்றால், அடுத்த போட்டியை வெல்ல உங்களுக்கு இந்த ஆக்ரோஷமும், சண்டையும், நம்பிக்கையும் நிச்சயம் இருக்க வேண்டும். இதனாலேயே தற்போது 1-1 என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது" என இந்திய அணியின் இரண்டாவது போட்டி செயல்பாடு குறித்து ஜாகிர் கான் பேசினார்.  

 

"கேப்டன் ரோஹித் சர்மாவால் தனிப்பட்ட ஆட்டத்தை வீரர்களிடம் இருந்து வாங்க முடிந்தது என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் ஓர் அணியாக பார்க்கும்போது சில பலவீனங்களும் தென்படுகின்றன" என ஜாகிர் கான் எச்ச்ரிக்கை விடுத்தார்.

 

"குறிப்பாக நாம் பேட்டிங்கை எடுத்துக்கொண்டால், இதுபோன்ற ஆடுகளத்தில் இந்திய பேட்டர்கள் இன்னும் சிறப்பாக செய்யப்பட்டிருக்க வேண்டும். இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸ் பேட்டிங்கை பாருங்கள், ஒரே ஒருவர் மட்டுமே அரைசதம் கடந்தார், இருப்பினும், அந்த அணியால் 300 ரன்களை நெருங்க முடிந்தது. அதற்கு கூட்டு முயற்சி வேண்டும்" என்று இந்திய பேட்டிங் ஆர்டர் மீதான கவலையை ஜாகீர் கான் வெளிப்படுத்தினார்.

இரண்டு இளம் பேட்டர்களை பாராட்டி பேசிய ஜாகிர் கான், "யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில் ஆகியோரின் அற்புமான இன்னிங்ஸை நாம் பார்த்தோம். ஆனால் பேட்டிங்கில் இன்னும் நிறைய இடங்களில் இந்திய அணி முன்னேற வேண்டியிருக்கிறது" என்றார்.

 

ஜாகிர் கான், "பந்துவீச்சிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாகவே செயல்பட்டார். இந்த வகையான ஆடுகளத்தில், உங்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் சில நேரங்களில் அழுத்தத்தில் இருப்பதை உங்களாலும் உணர முடியும். அதனால் அவர்களுக்கு பேட்டர்களின் உதவி தேவைப்படும்" என்றார். 

 

மேலும் தொடர்ந்த அவர்,"எனவே, இந்த எல்லா காரணிகளையும் கட்டுப்படுத்த இங்குதான் கேப்டனின் பங்கு உள்ளது. மேலும் இந்த காரணிகள் மற்றும் சூழ்நிலைகள் அனைத்தையும் பார்க்கும்போது ரோஹித் சிறப்பாக இருந்துள்ளார் எனலாம்" என்றார். 

 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் பிப். 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு மட்டுமின்றி மீதம் உள்ள போட்டிகளுக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link