வனிதா வீட்டு திருமணத்தில் பிக்பாஸ் நட்சத்திரங்கள்! ‘அவங்கள’ காணுமே..!
கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் தொடங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் 7. இதில் 22 பேர் போட்டியாளர்களாக நுழைந்தாலும், வைல்டு கார்டு மூலம் போட்டியாளராக நுழைந்த ஆர்.ஜே.அர்ச்சனாதான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சி மூலம், சில போட்டியாளர்கள் நெருங்கிய நண்பர்களாக மாறினர். பூர்ணிமா, மாயா, நிக்ஸன், விஜய் வர்மா, ஜோவிகா, அக்ஷயா ஆகியோர்தான் அந்த நண்பர்கள். இவர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் வெளியில் அடிக்கடி மீட்டிங் போட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் 7 போட்டியாளர் ஜோவிகாவின் தாயும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், பூர்ணிமா, நிக்ஸன், விஜய் வர்மா, ஜோவிகா உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
இது, வனிதாவின் இல்லத்திருமண விழா என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் சாப்பிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. ஆனால், இதில் ஒரு போட்டியாளரை மட்டும் காணவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் கேட்டுள்ளனர்.
பிக்பாஸ் 7 போட்டியின் இரண்டாவது ரன்னர் அப் பட்டத்தை வென்ற மாயாவைத்தான் அனைத்து ரசிகர்களும் போட்டோக்களில் தேடி வருகின்றனர்.
மாயா, சில நாட்களுக்கு முன்னர் வனிதாவின் வீட்டில் ஜோவிகா, கானா பாலாவையும் நேரில் சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தையும் வனிதா வெளியிட்டார்.
ஜோவிகா உள்பட, அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களும் தற்போது பிற ஷோக்கள், படங்களில் பிசியாகியுள்ளனர்.