பிக்பாஸ் 7: இந்த வாரம் 2 எவிக்ஷன்! வெளியேறிய போட்டியாளர்கள் யார் யார்?
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.
நாமினேஷன் லிஸ்டில் விசித்ரா, சரவண விக்ரம் ஆகியோர் இருந்தனர்.
ஜோவிகா முதல் போட்டியாளராக சேவ் செய்யப்பட்டார்.
பிக்பாஸின் இந்த சீசனில் மிகவும் வலுவான போட்டியாளராக கருதப்படுபவர், கூல் சுரேஷ்.
பிக்பாஸ் போட்டியில் இந்த முறை டபுள் எவிக்ஷன் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வினுஷா தேவி, ஆரம்பத்தில் இருந்தே சரியாக மகிழ்விக்காத போட்டியாளராக இருந்தார். இவர், இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
பாடகரும் நடிகருமான யுகேந்திரனும் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.