பிக்பாஸ் 7:ஜோவிகாவை சர்ப்ரைஸாக சந்தித்த ஆர்.ஜே.பிராவோ!
வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். 50 நாட்களுக்கும் மேல் பிக்பாஸ் இல்லத்தில் தாக்குப்பிடித்த இவர், சில நாட்களுக்கு முன்பு வாக்குகள் குறைவாக பெற்றதால் எவிக்ட் செய்யப்பட்டார்.
ஜோவிகா, பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறியவுடன் தனது வேலையை பார்க்க தொடங்கிவிட்டார். இது குறித்த பதிவை அவரது தாய் வனிதா வெளியிட்டிருந்தார்.
பிக்பாஸ் 7 போட்டிக்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தவர், ஆர்.ஜே.பிராவோ. இவர், ஜோவிகா எவிக்ட் ஆவதற்கு முதல் வாரம் வெளியேறினார்.
ஜோவிகாவும், ஆர்.ஜே.பிராவோவும் பிக்பாஸ் போட்டியில் இருந்த போது நல்ல நண்பர்களாக இருந்தனர். பிராவோ, ஜோவிகா எவிக்ட் செய்யப்படுவதற்கு முதல் வாரம்தான் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு, இருவரும் ஒன்றாக மீட் செய்துள்ளனர். இது குறித்து ஆர்.ஜே.பிராவோ இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஜோவிகாவை ஜெபவிகா என சிரிப்பூட்டும் வகையில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆர்.ஜே.பிராவோ-ஜோவிகா ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உண்மையான நண்பர்கள் பிக்பாஸ் இல்லத்திற்கு வெளியில் சந்தித்து கொண்டனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ஆர்.ஜே.பிராவோ ஜோவிகாவை அவரது வேலையில் சந்தித்து சர்ப்ரைஸ் செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.