பிக்பாஸை தொகுத்து வழங்க கமல் வாங்கும் சம்பளம்! அடேங்கப்பா..இத்தனை கோடியா!

Sun, 17 Dec 2023-2:34 pm,

நடிகராகவும், இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பன்முக திறமை கொண்டவர்,  கமல்ஹாசன். இதனால் இவரை ‘உலக நாயகன்’ என பலர் அழைப்பதுண்டு. 

வெளிநாட்டில் ‘பிக்பிரதர்’ என்று நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியை, அதே கான்சப்டுடன் இந்தியில் பிக்பாஸ் என்ற பெயரில் 17 சீசன்களாக நடைப்பெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, தென்னிந்திய மொழிகளில் பிக்பாஸ் போட்டி ஆரம்பித்தது. இதை, அந்தந்த மொழி சூப்பர் ஸ்டார் நடிகர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 

கமல்ஹாசன் கூறிய கருத்துக்கள், பல நேரங்களில் வெளியில் பிரச்சனையாக வெடிப்பதுண்டு. இந்த சீசனிலும் இவர் கூறிய பல விஷயங்களால் மக்கள் மத்தியில் பிரச்சனைகள் வெடித்தன. 

கமல், ஒரு படத்தில் நடிக்க 70-80 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர், பிக்பாஸ் போட்டியை தொகுத்து வழங்க எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

கமல், வாரத்தில் இரண்டு நாட்கள் பிக்பாஸ் போட்டியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர், இந்த சீசனுக்காக ரூ.130 கோடு சம்பளமாக வாங்கி வருகிறாராம். 

கமல், கூடிய விரைவில் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. 

கமல்ஹாசனுக்கு பதிலாக வேறு ஒரு பெரிய நடிகர் இந்த போட்டியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link